இந்த காட்சி வேணாம் ப்ளீஸ்.. ஆடம் பிடித்த ரித்விகா

0
2060
Actress Rithvika

ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் மற்றும் கபாலி ஆகிய படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை ரித்விகா இந்த படங்களில் தன் திறமையான நடிப்பினை வெளிடுப்படுத்தி இருப்பார். அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

அட்டகத்தி தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து படத்திலும் நடித்தார் ரித்விகா. தற்போது ஓநாய்கள் ஜாக்கிரதை என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கபாலி விஷ்வந்த், அம்ருதா, இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

குழந்தைகள் கடத்தலை மையாக கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் இயக்குனர் ஏ. வெங்கடேசை கீழே தள்ளி காலால் மிதிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த காட்சியில் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார் நடிகை ரித்விகா.

இதையும் படிக்கலாமே:
தளபதி 62ல் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார்?

அவர் எனக்கு சீனியர். வயதில் அனுபவத்திலிலும் மூத்தவர் அவரை நான் எப்படி காலால் எட்டி உதைப்பேன் எனக் கூறி அந்த காட்சியில் நடிக்க மறுத்துள்ளார் ரித்விகா. பின்னர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளது படக்குழு.