இப்போ வர படங்கள்ல் எல்லாம் வன்முறை, கத்தின்னு தான் இருக்கு, ஆனா இந்த படத்தில் – சிங்கப்பூர் சலூன் சக்ஸஸ் மீட்டில் RJ பாலாஜி பேச்சு.

0
170
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆர் ஜே பாலாஜி. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், மீனாக்ஷி சவுத்ரி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக முடி திருத்தம் செய்யும் தொழிலை மையமாக வைத்து இயக்குனர் கதை கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் ஹீரோ ஆர்ஜே பாலாஜி தன்னுடைய சொந்த ஊரில் முடி திருத்தம் செய்யும் சாச்சாவை பார்த்து பார்த்து முடி திருத்தும் வேலையின் மீது ஆசை ஏற்படுகிறது. இதனால் அவரிடம் முடி திருத்தும் வேலையை கற்றுக் கொள்கிறார். பிறகு ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய படிப்பை முடித்தவுடன் சிங்கப்பூர் சலூன் என்று தன்னுடைய சொந்த ஊரிலேயே சலூன் ஒன்றை துவங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பின் கஷ்டப்பட்டு போராடி சொந்த சலூனை ஆரம்பிக்கிறார் பாலாஜி.

- Advertisement -

சிங்கப்பூர் சலூன் படம்:

நினைத்தபடியே சிங்கப்பூர் சலூன் என்ற பெயரையும் வைக்கிறார். அதற்குப் பிறகு ஆர்ஜே பாலாஜிக்கு வரும் சோதனைகள் தான் படத்தின் சுவாரசியமே. அதை எல்லாம் எப்படி அவர் எதிர்கொள்கிறார்? என்ன நடந்தது? இறுதியில் சிங்கப்பூர் சலூன் பெரிய அளவில் கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள்.

சக்சஸ் மீட் :

இந்த நிலையில் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் பலருமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், இந்த விழாவில் கலந்து கொண்ட இமான் அண்ணாச்சி, இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பெருசா என்று கேட்டேன். சின்ன கதாபாத்திரம் என்று இயக்குனர் சொன்னார். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் உங்கள் படத்தில் நான் நடிகனும் என்று சொன்னேன். ஒரு படம் உருவாக என்னென்ன கஷ்டங்கள் இருக்கு என்று தெரியும். பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டுகோள். நிறைய நபர் விமர்சனத்தை போடுறாங்க. ஒரு படத்தை கஷ்டப்பட்டு பண்றாங்க, முதலில் நிறைகளை சொல்லிவிட்டு கடைசியாக இந்த விஷயங்கள் எல்லாம் இப்படி பண்ணினா நல்லா இருக்குமானு சொல்லி முடிங்க என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

சின்னி ஜெயந்த்:

இவரை அடுத்து படத்தில் நடித்த சின்னி ஜெயந்த், ஆர் ஜே பாலாஜிக்கு நான் ஒரு பட்டம் கொடுக்கிறேன். அவர் சவுத் இந்தியன் அமீர்கான். அவருடைய ஒவ்வொரு படங்களும் வித்தியாசமாக பண்றார். நான் இந்த படத்தை விழுப்புரத்தில் பார்த்தேன். அங்கு இருக்கிறவர்களிடம் இந்த படம் எப்படி இருக்கு? என்று கேட்டேன். எல்கேஜி படத்தோட ஹீரோ படம் ரொம்பவே நல்லா இருக்கு என்று சொன்னார்கள் என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து இயக்குனர் கோகுல், இந்த படத்தில் என்னுடைய கனவு ரொம்ப பக்கத்தில் வந்திருக்கு ஒரு வசனம் வரும்.

இயக்குனர் சொன்னது:

இந்த படம் எனக்கு அப்படித்தான். நேத்து சிகை அலங்கார சங்கத்தினர் 500 நபர்கள் இந்த படத்தை பாராட்டி ஒரு விழாவை ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். அங்க ஒருத்தர், இந்த கத்தி பண்ணாத விஷயங்களை இந்த படத்தோட கதை செய்து விட்டது சொன்னார். ஒரு படத்தோட நோக்கம் ரொம்பவே முக்கியம். இந்த படத்தை முடிக்கும் போது சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு சமர்ப்பணம்னு சொல்லி முடித்திருப்பேன். நான் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன். விமர்சனங்களை தாண்டி இந்த படத்தை பலர் வந்து பார்த்திருக்கிறார்கள். நான் பண்ணதிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்று கூறி இருந்தார்.

ஆர் ஜே பாலாஜி சொன்னது:

இவர்களைத் தொடர்ந்து படத்தின் நாயகன் ஆர் ஜே பாலாஜி, படத்தோட இரண்டாம் பாதி பலருக்குமே கனெக்டாகி இருந்தது என்று சொன்னார்கள். அதற்கு முக்கிய காரணம் அரவிந்த்சாமி ஓட கதாபாத்திரம் தான். முதல் வாரம் ஒரு திரைப்படம் நன்றாக ஓடிய பிறகு இரண்டாம் வாரத்தில் அந்த படம் இன்னும் போகும் என்று சொல்லி வைக்கிறது தான் சக்சஸ் மீட். போன வாரம் ரிலீஸ் ஆன படங்களில் இந்த படம் அதிகமாக வசூல் பண்ணி அடுத்த வாரமும் நல்லா போகும் என்று நம்பிக்கை கொடுத்ததினால் இந்த சக்சஸ் மீட் ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போ இந்தி, பிற மொழிகளில் ரத்தம், கத்தியின் வன்முறையாக படங்கள் வருது. அந்த வகையில் வாழ்க்கை ஏதாவது பண்ணிட மாட்டோமானு இருக்குறவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற படமாக சிங்கப்பூர் சலூன் அமைந்திருக்கிறது என்று கூறியிருந்தார் .

Advertisement