மூக்குத்தி அம்மன் 2ல் இருந்து விலகிய ஆர்.ஜே. பாலாஜி, படத்தை இயக்குவது யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்

0
282
- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படத்திலிருந்து இயக்குனர் ஆர் ஜே பாலாஜி விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி ‘புத்தகம்’ என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் ‘எல்கேஜி’ படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி ஹீரோ ஆனார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

- Advertisement -

மூக்குத்தி அம்மன்:

இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நயன்தாரா முதன் முதலாக அம்மன் வேடம் அணிந்து இந்த படத்தில் தான் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருந்தது. சாமி பெயரை சொல்லி ஏமாற்றும் போலி சாமியார்கள், சாமி நம்பிக்கையால் ஏமாறும் மக்கள் போன்றவற்றை மையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.

மூக்குத்தி அம்மன் 2:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தையும் எடுக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் மீண்டும் இந்த படத்தில் நயன்தாராவே அம்மனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தை விட்டு விலகிய ஆர் ஜே பாலாஜி:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜி தான் இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து ஆர்.ஜே பாலாஜி விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து ஆர்.ஜே பாலாஜி இயக்குவதில் இருந்து விலகியதால் பிரபல சுந்தர் சி தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பாலாஜி எதற்காக விலகினார் என்று தெரியவில்லை. தற்போது சுந்தர் சி அவர்கள் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார்.

சுந்தர். சி குறித்த தகவல்:

அதை முடித்துவிட்டு மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சுந்தர்.சி ஸ்டைல் வேறு ஒரு வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும் என்பதால் இது ஒரு புதுமையான மூக்குத்தி அம்மனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்திருந்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். முந்தைய அரண்மனை பாகங்களை விட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisement