டான் பட இயக்குனருக்காக சிவகார்த்திகேயன் செய்திருக்கும் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயன் எதையாவது சாதிக்க வேண்டும் முயற்சியில் இருக்கிறார்.
டான் படத்தின் கதை:
அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? சாதித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்லவிமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனருக்காக சிவகார்த்திகேயன் செய்திருக்கும் செயல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
https://twitter.com/ranjithk1322/status/1525129044907266048
இயக்குனருக்காக சிவா செய்தது:
டான் படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருந்தார்கள். அப்போது படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் பெயரை சொல்லி திரையரங்கில் கரகோஷம் போட்டு கத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் இயக்குனர், இயக்குனர் என்று சொல்லி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்களும் இயக்குனரை பாராட்டி இருந்தார்கள். இப்படி சிவகார்த்திகேயன் செய்த செயலின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பாராட்டும் ரசிகர்கள்:

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், என்ன மனுசு, தன்னைப் பார்க்க தான் இவ்வளவு கூட்டம் என தெரிந்தும் இயக்குனருக்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிந்து சிவகார்த்திகேயன் செய்திருக்கும் செயல் வேற லெவல் என்று பாராட்டி சிவகார்த்திகேயனை புகழ்ந்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சிவா அவர்கள் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவி தான் அயலான் படத்தை இயக்கி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





