டிடிஎஃப் வாசனின் கடையில் திருட்டு நடந்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளத்தின் மூலம் வைரலாகி தற்போது பிரபலமான நபராக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும்போது ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு உதவிகள் செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
இதனால் இவர் சீக்கிரமாகவே 2K கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். இருந்தாலும், இவர் வண்டியில் அதிவேகமாகச் சென்று பிறரை பயமுறுத்துவதும், சாலை விதிகளை மீறுதல் போன்ற பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் இவரிடமிருந்து லைசன்ஸ் பறிக்கப்பட்டது. அதன் பின் டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் செல்அம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதற்குப் பிறகு இந்த படத்தை குறித்து எந்த ஒரு தகவலுமே வெளியாகவில்லை.
டிடிஎஃப் வாசன் குறித்த தகவல்:
பின் சில மாதங்களுக்கு முன் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர், இந்தப் படத்தில் கதாநாயகனாக டிடிஎப் வாசன் நடித்தார். அவரை இந்த படத்தில் இருந்து நீக்கி விட்டோம். வேறு ஒரு நடிகர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அது தொடர்பான தகவலையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கூடிய விரைவில் வெளியிடுவோம் என்றார். அதன் பின் இது தொடர்பாக மனவேதனையில் டிடிஎஃப் வாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், என்னிடம் சொல்லாமலே என்னை மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். என்னிடம் சொல்லியிருந்தால் நானே விலகி இருப்பேன்.
டிடிஎஃப் வாசன் சர்ச்சை:
இதுவரை இந்த படத்திற்காக ஒரு பூஜை, ஒரு போட்டோ சூட் மட்டும் தான் எடுத்திருக்கிறார்கள். பூஜைக்கு கூட பணம் இல்லை என்று நான் தான் கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்பவர்கள் முன்பு நான் வாழ்ந்து வெற்றி அடைவது தான் அவர்களுக்கு நான் கொடுக்கும் பதிலடி. நான் மனமுடைய மாட்டேன், தளர மாட்டேன் என்று கூறி இருந்தார். அதை அடுத்து இயக்குனர்- டிடிஎப் வாசன் இருவரும் மாத்தி மாத்தி பேட்டி கொடுத்து இருந்தார்கள். தற்போது தான் அந்த பிரச்சனை ஓய்ந்தது.
டிடிஎஃப் வாசன் நடிக்கும் படம்:
அதோடு இந்த படத்தில் ஹீரோவாக கூல் சுரேஷ் கமிட்டாகி இருக்கிறார். அதேபோல் தற்போது டிடிஎப் வாசன், ஐபிஎல் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இவர் நடிப்பை தாண்டி தன்னுடைய நண்பர் அஜிஸ் உடன் சேர்ந்து சென்னையில் டிடிஎஃப் பிட் ஷாப் என்ற கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில் பைக்குகளுக்கு தேவையானஅனைத்து உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகிறது.
டிடிஎஃப் வாசனின் கடையில் திருட்டு:
இப்படி இருக்கும் நிலையில் டிடிஎஃப் வாசனின் கடையில் திருட்டு நடந்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பைக்கில் வந்த இரண்டு திருடர்கள் சென்னையில் உள்ள டிடிஎப் வாசனின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று விலை உயர்ந்த ஹெல்மெட்டுகள் மற்றும் கல்லாவில் இருந்த பணத்தை திருடி சென்றிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோவை டிடிஎப் வாசன், இன்ஸ்டாவில் பதிவிட்டு காசெல்லாம் பறிகொடுத்து விட்டேன் என்று வடிவேல் பேசும் வசனத்தை
போட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் டிடிஎப் வாசனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.