பிகில் ட்ரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ ஷங்கர்.. தந்தையின் மகிழ்ச்சி..

0
16162
Robo-shankar
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சர்க்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களை தவிர விவேக், யோகி பாபு , ஆனந்த்ராஜ், கதிர் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளதால் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போதோ வெளியான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு வெளியாகியது. இந்த ட்ரைலர் வெளியான வெறும் மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மாபெரும் சாதனையை படைத்து இருந்தது. மேலும், இந்த படத்தின் ட்ரைலரை கண்டு பல்வேறு சினிமா பிரபலங்களும் சமுக வளைத்ததில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் நடிகர்களை தாண்டி, பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கூட இந்த படத்தின் ட்ரைலரை கண்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார். அவ்வளவு ஏன், ஹாலிவுட் நடிகரான பில் டியூக் கூட பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு அட்லீக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : தளபதி விஜய் குடும்பத்தினரை சந்தித்த தர்ஷன்.. குவியும் லைக்ஸ்..என்னவா இருக்கும்..

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தில் தனது மகளைக் கண்டு கண்கலங்கிய தாக பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், பிகில் ட்ரைலரில் என் மகளை பார்த்து கண்ணில் கண்ணீர் வழிந்தது. என் மகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்தற்கு விஜய் சாருக்கு அட்லீ சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். ட்ரைலர் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளனர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரோபோ ஷங்கரும் ஒரு முக்கியமான நடிகர் என்றே கூறலாம்.

-விளம்பரம்-

நடிகர் ரோபோ ஷங்கர், ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் மேடை கலைஞராக இருந்து வந்தார். அதன் பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். விஜய் டிவி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் ஒரு சில சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோபோ ஷங்கர் அதன்பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து விட்டார். இவர் விஜய்யுடன் புலி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது இவரது மகள் விடை நடித்து வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement