சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று உள்ளனர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர், நடிகைகள் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர். சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர்.
அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். விஜய் டிவி மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு வெளி வந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் நடிகர் ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : பெயரை மாற்றி தனது ஜல்லிக்கட்டு போராட்ட புகைப்படத்தை பதிவிட்ட ஜூலி. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.
2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள். இவர் பிறந்த நாளை இவருடைய மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் எளிமையாக கொண்டாடி உள்ளார். மிகவும் எளிமையாக வீட்டிலேயே கேக் வெட்டி தன் குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார் நடிகர் ரோபோ சங்கர்.
மேலும், இவர் பிறந்த நாள் போது இவருடைய மனைவி பிரியங்கா அவர்கள் தங்க ஜெயினை ரோபோ சங்கருக்கு தன்னுடைய பிறந்த நாள் பரிசாக கொடுத்து உள்ளார். நடிகர் ரோபோ சங்கர் பிறந்த நாள் போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.