விஜய் 63யில் பிரபல காமெடி நடிகரின் மகள்.! அப்பாவிற்கு கிடைக்காத வாய்ப்பு மகளுக்கு.!

0
640

இளையதளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.பெயரிடபடாத இந்த புதிய படத்தை அனைவரும் விஜய் 63 என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு போன்ற பல நடிகர் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும் நடிக்க இருப்பதாக நடிகர் ரோபோ ஷங்கரே தெரிவித்துள்ளார். இந்த படத்தில் 16 பெண்கள்ஏற்கனவே தேர்வாகி இருந்த நிலையில் தற்போது ரோபோ ஷங்கரின் மகளும் தேர்வாக உள்ளார். இந்த தகவலை தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் நடத்திய சங்க விழாவில் தெரிவித்தார் ரோபோ ஷங்கர்.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய ரோபோ ஷங்கர், இந்த நல்ல விழாவில் இயக்குனர் அட்லியின்  அனுமதியோடு ஒரு நல்ல தகவலைச் சொல்றேன். எனது மனைவியும், மகளும், ஒவ்வொரு நாள் ராத்திரியும் டிக் டாக் வீடியோ போடுறோம்னு தினமும் என்னை டார்ச்சர் பண்ணாங்க.அப்படி அவங்க செய்த பல வீடியோக்கள் யார் மூலமாகவோ இயக்குனர் அட்லி பார்வைக்கு போயிருக்கு.

விஜய் படத்தில் நடிக்கப் போறவங்க தேர்வுல எனது மகளின் வீடியோவை பார்த்ததால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்கு தேர்வாகி இருக்கிறார். முன்னாடியே பல வாய்ப்புகள் வந்த போது படிப்பு முக்கியம் என்று தவிர்த்தேன். ஆனால், அட்லி – விஜய் கூட்டணியில் நடிக்க வாய்ப்பு வந்தால் விட முடியுமா?, அதனால் எப்ப தேதி கேட்பார்னு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் ரோபோ ஷங்கர் இதுவரை விஜய் படத்தில் நடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement