சதீஷுக்கு பதிலாக உங்க படத்தில் என்னை போடுங்க – மேடையில் விஜய்யிடம் கெஞ்சிய பிரபல நடிகர்

0
15787

கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் மெர்சல். இந்த படம் விஜய்க்கு அவரது சினிமா வாழ்க்கையில் காணாத வெற்றியை தேடித் தந்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பிற்காக விஜய்க்கு சிறந்த நடிகர் விருதை வழங்கியது பிரபல வார இதழ்.

robo shankar

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை காமெடி நடிகர் ரோபோ சங்கர் தொகுத்து வழங்கினார். விஜய்க்கான விருதினை அறிவித்த ரோபோ சங்கர், விஜய் மேடைக்கு வந்தவுடன், ‘என்ன சார், உங்க படத்தில் எப்போதும் சதீஷ் தான் காமெடியனாக நடிக்கிறார். அவருக்கு பதில் எனக்கு எப்போது வாய்ப்பு கொடுக்க போகிறீர்கள் என நகைச்சுவையாக கேள்வி கேட்டார்.

இதற்கு விஜய் எப்போதும் போல புன்னகைத்து விட்டு சென்றுவிட்டர். ரோபோ சங்கர் நடித்துள்ள கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகம் சென்ற வாரம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.