தன் படத்தை பார்க்க தன் காஸிலேயே டிக்கெட் புக் பண்ணி கொடுத்த நயன் பட இயக்குனர் – அப்படி என்ன சொன்னார் அந்த ரசிகர்.

0
510
nayanthara
- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் பல வருடமாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர்கள் காதலிப்பது மட்டும் இல்லாமல் சினிமாவிலும் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருந்தார்கள். இதன் மூலம் இவர்கள் பல படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல் வெளியிட்டும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Nayanthara, Vignesh Shivan to present Tamil film Rocky! Tamil Movie, Music  Reviews and News

நயன் – விக்கி தயாரித்த படம் :

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா– விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ராக்கி. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா, ரோகினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் வசந்த் ரவி.

- Advertisement -

ராக்கி குவித்த விருதுகள் :

இவரின் இரண்டாவது படம் தான் ராக்கி. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் பிரமோஷனில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காலம் ஒரு துரோகி என்ற டைட்டில் பாடலில் தோன்றி இருந்தார். ஹாலிவுட் ஹீரோயின் போல் மாஸான கெட் அப்பில் அவர் நடித்து இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கி படம் குறித்து ரசிகர் போட்ட பதிவு :

இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் திரையரங்கில் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்பதே உண்மை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒரு ட்விட்டரில் ‘ராக்கி இன்னொருவாட்டி பாக்கணும் போல இருக்கு ஆனா காசு வேற இல்ல வாழ்க்கையடா இது. என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

நெகிழ்ச்சி அடைந்த ரசிகர் :

இவரின் இந்த பதிவை பார்த்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ‘எந்த தியேட்டர்னு சொல்லுங்க டிக்கெட் புக் பண்ணி தரேன்’ என்று பதிவிட்டு அந்த ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திஇருக்கிறார். இயக்குனரின் இந்த பதிவை கொண்டு வந்த ரசிகர் நெகிழ்ந்து போயிருக்கிறார் அந்த ரசிகர்.

முதல் நாளில் படம் பார்க்க வந்த இரண்டே பேர் :

ஏற்கனவே இந்த படம் வெளியான முதல் நாளே ட்விட்டரில் ஒரு ரசிகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் திரை அரங்கில் இரண்டு நபர்கள் மட்டுமே இந்த படத்தை பார்க்க வந்திருப்பதாக கூறி இருந்தார். இதற்க்கு பதில் அளித்த அருண் மாதேஸ்வரன் ‘ பெரிய ஸ்க்ரீனில் பிரைவேட் ஸ்கிரீன் என்று நினைத்து பாருங்கள் ‘ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement