அமலா பால் பெயரை கருணாஸ் சொல்லியும் தடுத்த ரோகினி – செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம்

0
292
- Advertisement -

அமலாபால் குறித்து கருணாஸ், ரோகினி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உடைய 68-வது ஆண்டு பொதுக்கூட்டம் சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் தான் நடந்தது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றி இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க நிர்வாகிகள் உடைய பதவி காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி வரை நீட்டி இருப்பதாகவும் அறிவித்திருந்தார்கள். பின் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக விசாகா கமிட்டி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய தலைவர் ரோகினி. பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரோகினி, 2019 ஆம் ஆண்டு விசாகா கமிட்டி உருவாக்கி விட்டோம்.

- Advertisement -

ரோகினி பேட்டி:

அதன் மூலம் வந்த சில பாலியல் புகார்களையும் தீர்த்து வைத்திருக்கிறோம். அதோடு பாதிக்கப்பட்டவர்கள் உடைய விவரமும் வெளியே தெரியாமல் பாதுகாத்து வருகிறோம். இதுதான் எங்களுடைய நோக்கம். அதனால் தான் நாங்கள் வெளியேவும் சொல்லவில்லை. இப்போது பாலியல் புகார் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தி இருக்கிறோம். எந்த ஒரு புகாராக இருந்தாலும் சங்கத்தை தொடர்பு கொண்டு புகார் கொடுங்கள்.

பாலியல் புகார் குறித்து சொன்னது:

முறையாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அதற்கு முன்னால் பாலியல் புகார்கள் தொடர்பாக ஊடங்களில் எல்லாம் பேச வேண்டாம். ஊடங்களில் பேசுவதால் எந்த பயனுமே கிடையாது. மேலும், புகார் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்து ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்படும். புகார் அளிக்கும் முறையை எளிமையாக்க தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

நடிகர் சங்கம் குறித்து சொன்னது:

அனைத்து பெண்களுக்குமே நடிகர் சங்கம் எப்போதும் ஆதரவாக இருக்கும். நிறைய பேர் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். அதை விசாரித்தும் இருக்கிறோம். புகார் கொடுத்த பெண்கள் பலரும் இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாருடைய பெயரும் வெளியில் சொல்லும் எண்ணம் இல்லை என்று ரோகினி பேசிக் கொண்டிருக்கும்போதே அமலா பால் என்று நடிகர் கருணாஸ் குறுக்கிட்டு பேசியிருந்தார்.

அமலா பால் குறித்து சொன்னது:

உடனே ரோகினி, பெயர் எல்லாம் வேண்டாம். பிரச்சனை என்னவென்று சொன்னால் மட்டும் போதும் என்று தடுத்து விடுகிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர், அமலா பால் வாழ்வில் என்ன பிரச்சனை? யார் என்ன எந்த தொந்தரவு செய்தார்கள்? மலையாளம் மொழியில் பிரச்சனையா? தமிழ் மொழியில் பிரச்சனையா? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement