மேடையில் ரோகிணியை அசிங்கபடுத்திய இளையராஜா.! முதன் முறையாக வாய் திறந்த ரோகிணி.!

0
892
- Advertisement -

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறைகளாக அனைவரையும் தனது இசையால் கட்டிப்போட்டவர். இவரது பல பாடல்கள் மிகவும் இனிமையாகவும் மென்மையாகவும் நம்மை கவர்ந்தாலும் இவரது இனிமையாகவும் குணம், பல விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறந்த இசையமைப்பாளராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபக்காரராக இருக்கிறார் இசைஞானி.

சமீபத்தில் இவரது 75வது பிறந்தநாளை முன்னிட்டுஅவரை கௌரவப்படுத்தும் வகையில் ‘இளையராஜா 75’என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கர் மற்றும் விக்ரம் மேடையில் இருந்தபோது நிகழ்ச்சியின் மற்றும் இருந்த பிரபல நடிகை ரோகினி ,இசைஞானியிடம் எப்போது ஷங்கருடன் நீங்கள் பணியாற்றுவீர்கள் அதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று ஒரு சாதாரண கேள்வியைத்தான் கேட்டார்.

- Advertisement -

அதற்கு மிகவும் கடுப்பான இளையராஜா எனக்காக நீ வாய்ப்பு கேட்கிறாயா. இந்தக் கேள்வி மிகவும் தவறான கேள்வி என்று மிகவும் காட்டமாக பதில் அளித்தார்.மேடையில் இருந்த மிகவும் , விக்ரமும் செய்வதறியாது தர்ம சங்கடத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவந்தது.

மேலும், இளையராஜா மீது பல்வேறு விமர்சனங்களும் முன் வைக்கப்ட்டது. இந்த சர்ச்சைக்கு நீண்ட நாட்களுக்கு பின் பதிலளித்துள்ளார் நடிகை ரோகிணி. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள அவர், இளையராஜா என்னிடம் பேசியது மிகப் பெரிய விடயம் இல்லை. எனவே, அதனை மறந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். ரோகிணியின் இந்தப் பதிவிற்கு ஆதரவாகப் பலர் பதிவிட்டு வருகின்றனர். 

-விளம்பரம்-

Advertisement