தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று உள்ளது. அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் ரிலீசாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார்.
இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் மேலும், இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். படத்தில் சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.
வலிமை படம் பற்றிய தகவல்:
இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹீமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். வலிமை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு ‘வலிமை’ படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.
வலிமை படத்திற்காக டிக்கெட் கூடுதல் வசூல்:
இப்படி இருக்கும் நிலையில் அஜித்குமாரின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் டே ஷோவுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக கொடுத்த புகாரில் வசூலித்த பணத்தை திருப்பித்தர வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த மாதம் 20ஆம் தேதி ரோகிணி திரையரங்கில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திற்கு புக்மை க்ஷோ செயலி மூலம் 395 ரூபாய் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். முன்பதிவு செய்த டிக்கெட்டில் 164 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டதை அறிந்த தேவராஜன் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மற்றும் பதிவு தபால் மூலம் புகார் அளித்துள்ளார்.
போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்:
பின் கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலையத்திற்கு புகார் மாற்றப்பட்டது. இந்த நிலையில் தேவராஜனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து ரோகினி திரையரங்கு மேலாளர் ராமலிங்கத்தை கூட அழைத்து கூடுதல் டிக்கெட் வசூல் செய்தது தொடர்பாக விசாரித்தனர். விசாரணையில் கூடுதல் டிக்கெட் வசூல் செய்தது குறித்து ராமலிங்கம் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் முதல் காட்சியில் கூடுதல் கட்டணத்துடன் டிக்கெட் வழங்கப்பட்ட அனைவருக்கும் பாக்கி தொகையை திருப்பி செலுத்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
பணத்தை திருப்பி கொடுத்த திரையரங்கு மேலாளர்:
மேலும், ரோஹினி திரையரங்கத்தின் மேலாளரும் பணம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக புகார் அளித்த தேவராஜன் படம் திரும்பி வந்து விட்டதாக அறிவித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திரையரங்கு மேலாளர் ராமலிங்கம் கூறியது, தின்பண்டங்களை வாங்குவதற்காக தான் கூடுதலாக 164 ரூபாய் பெறப்பட்டதாகவும், ஒரு காட்சிக்கு 500 பேர் திரைப்படத்தை கண்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் முறையாக பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். இதனால் அஜீத் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளார்கள்.