இது தான் எங்களின் வெற்றியின் ரகசியம். வெற்றி குறித்து சுவாரசிய தகவலை கூறிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.

0
1311
- Advertisement -

ஆப்கனிஸ்தான் அணியை வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சிலவற்றை கூறியுள்ளார். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஐந்தாவது போட்டியில் இந்தியா அணி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் மோதினர். அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் இன்று இந்திய அணி ஆப்கானிஸ்தான அணியை எதிர்கண்டது அதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யது பேட்டிங்கை தேர்வு செய்தது.

-விளம்பரம்-

அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களில் பும்ராவிடம் அவுட் ஆகி வெளியேற அதன் பின் குர்பாஸ் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் நிதானமாக விளையாட நினைத்த ரஹ்மத் 16 ரன்களிலே தாக்கூர் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேற அதன் பின் அஸ்மத்துல்லாஹ் நிதானமாக வெளியே அடி 66 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து விளையாடி ஷாஹிதி 80 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான அணி அடுத்தடுத்து வெக்கெட்டுகளை இழந்து 50 ஓவர் முடிவில் 272 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 273 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் கிஷன் ஆரம்பம் முதல் அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீசை நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர். ரோகித் சர்மா 63 பந்துகளில் தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். மேலும் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பின்றி 150 ரன்களை குவித்தனர்.

மற்றொரு பக்கம் விளையாடி கொண்டு இருந்த இஷாந்த் கிஷன் 46 பந்துகளில் 47 ரன்களை அடித்த நிலையில் ரஷித் கான் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணைத்து பந்து வீச்சை சிதறடித்து வந்தனர். அதன் பின் அவர் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் விராட் கோலி 55 ரன்களும் ஸ்ரேஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் ரோஹித் ஷர்மா வெற்றியை பற்றி பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

ரோஹித் ஷர்மா :

எங்களுக்கு கிடைத்த நல்ல வெற்றி, போட்டியின் தொடக்கத்தில் அந்த வேகத்தை பெறுவது மிகவும் முக்கியமானது. இது அழுத்தத்தை உள்வாங்கிக் கொண்டு களத்தில் சரியான முடிவை எடுப்பதாகும். நீங்கள் அழுத்தத்தை உள்வாங்க வேண்டியிருக்கும் எதிர் அணியில் ஒரு மந்திரம் இருக்கும். போட்டிக்கு முன் நாங்கள் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடினோம். எங்கள் அணியில் வெவ்வேறு திறன் கொண்ட வீரர்கள் கிடைத்துள்ளனர். அவர்கள் விளையாட்டின் வெவ்வேறு பண்புகளை அணிக்குக் கொண்டு வருகிறார்கள், அது உங்களிடம் இருக்கும் போது அது உங்களை ஒரு அணியாக நல்ல நிலையில் வைக்கிறது.

எங்களிடம் பயமற்ற கிரிக்கெட்டை பேட் மூலம் விளையாடக்கூடிய வீரர்களும், கடைசி ஆட்டத்தைப் போல உள்வாங்கும் ஆட்களும் கிடைத்துள்ளனர். (பாகிஸ்தான் விளையாடுவது மற்றும் அதைச் சுற்றியுள்ளது பற்றி பேசிய ரோஹித் ஷர்மா) எங்களைப் பொறுத்தவரை, வெளிப்புற சூழல்கள் பற்றி கவலைப்படாமல், நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களைப் பார்ப்பது முக்கியம். நாம் காட்ட வேண்டும் மற்றும் நன்றாக செய்ய வேண்டும். ஆடுகளம் எப்படி இருக்கிறது, என்ன காம்போ விளையாடலாம் என்பது போன்ற விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். வெளியில் என்ன நடந்தாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட மாட்டோம். வீரர்களாக நாம் என்ன செய்ய முடியும், எப்படிச் செயல்பட முடியும் என்பதில் கவனம் செலுத்துவது மட்டுமே.

Advertisement