‘நீ அங்கயே இருமா’ – வீல் சேரில் வந்த ரசிகையை மேடை வரை தூக்கி சென்ற அர்ஜுன் – ஒரு நெகிழ்ச்சியான தருணம். வீடியோ இதோ.

0
159
arjun
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் விளங்கி வருகிறது. குறிப்பாக கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று.

-விளம்பரம்-
Roja Serial Actress Priyanka Nalkari Latest Look Went Trolled

இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த சீரியல் தான் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது. அதோடு ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ரோஜா சீரியல் பற்றிய தகவல்:

ஆரம்பத்தில் இந்த தொடரில் வில்லியாக ஷாமிலி நடித்து இருந்தார். பின் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதில் தற்போது வில்லி என்ற அணு கதாபாத்திரத்தில் அக்சயா நடித்து வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த தொடரில் அஸ்வின் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் விலகி இருந்தார். இவருக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடித்து வருகிறார்.

சன் விருதுகள்:

இப்படி பல முக்கிய கதாபாத்திரங்கள் இந்த சீரியலில் இருந்து விலகி இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ரோஜா சீரியல் ஹீரோ அர்ஜுன் மேடையிலேயே கண் கலங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சன் டிவியில் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்று இருந்தது. இதில் ரோஜா சீரியல் ஹீரோ அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு மனம் கவர்ந்த நாயகன் என்ற விருது கிடைத்து இருந்தது.

-விளம்பரம்-

சிபு சூரியனுக்கு கிடைத்த விருது:

மேலும், விருது பெற்ற சிபு சூர்யன் எல்லோரும் நன்றி தெரிவித்து இருந்தார். பிறகு சிபு சூரியனின் தீவிர குழந்தை ரசிகை அவரது புகைப்படத்தை பரிசாக கொடுத்திருந்தார். அதன்பின் ஊனமுற்ற ரசிகை ஒருவர் அண்ணா என்று கூப்பிடுகிறார். இதைப் பார்த்த அர்ஜுன் அங்கிருந்து ஓடி வந்து அந்த ரசிகையை தன்னுடைய கையில் தூக்கிய படி மேடைக்கு சென்று உட்கார வைக்கிறார். அப்போது அந்த ரசிகரை சிபுவின் நெற்றியில் திருநீர் வைத்து சந்தோசப்படுகிறார். பின் மேடையில் அந்த பெண் ரசிகை கூறியிருந்தது,

மேடையில் கண் கலங்கிய அர்ஜுன்:

என்னுடைய அம்மா தவறிவிட்டார்கள். நீங்கள் உங்கள் அம்மா, தம்பியிடம் பாசமாக இருப்பதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். நமக்கும் இந்த மாதிரி கிடைக்காதா? என்று ஏங்கி இருக்கிறேன். இந்த மாதிரி பாசத்தோடு இருப்பவர்களுடன் பேச முடியாதா? என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். எனக்கு இப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று அந்த ஊனமுற்ற பெண் கூறியதைக் கேட்ட அர்ஜுன் மேடையிலேயே கண் கலங்கினார். அந்த ரசிகையின் அன்பில் உடைந்து அர்ஜுன் கண் கலங்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement