மைக் விவகாரம், பார்த்திபேனே தான் விளக்கம் கொடுத்துட்டு இருக்கார், ரோபோ ஷங்கர் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
455
parthiban
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் ரோபோ ஷங்கர் மீது பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்துவிட்டார் என்று பெரும் சர்ச்சை கிளம்பிய நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் ரோபோ ஷங்கர். தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-102-1024x569.jpg

இறுதியாக இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.இதனைத் தொடர்ந்து தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

மன்னிப்பு கேட்ட பார்த்திபன் ;

இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியது. இதனால் பார்த்திபன் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் பார்த்திபன். அந்த வீடியோவும் பெரும் வைரலானது.

parthiban

ரோபோ ஷங்கர் விளக்கம் :

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளா ரோபோ ஷங்கர் ‘‛ஒட்டுமொத்த விழாவையும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே கவனித்து வந்தார். மைக் பிரச்னையானதால் அந்த நேரத்தில் சற்று டென்சனாகிவிட்டார். இதற்காக போனில் என்னிடம் பல முறை மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதை கேட்டு நானே கண்கலங்கி விட்டார். அப்படி சொல்லாதீங்க, நான் எதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றேன். நிஜத்தில் பழகுவதற்கு இனிமையான நபர்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நான் இருந்தது பெருமை

யாரையும் புண்படுத்தாத ஒரு மனிதர். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளேன். 25 படங்களில் நடித்த அனுபவம் இந்த படத்தில் கிடைத்தது. படத்தில் ஒன் மேன் ஆர்மியாக வேலை பார்த்துள்ளார் பார்த்திபன். உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த விருதையும் இந்த படம் பெறும். இந்த படத்தில் நான் இருந்தது பெருமை. உலகமே திரும்பி பார்க்க போகும் ஒரு படமாக இருக்க போகிறது’ என்று கூறியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-104-625x1024.jpg

ரோபோவிற்கு முத்தம் கொடுத்த பார்த்திபன் :

இது ஒருபுறம் இருக்க ரோபோ ஷங்கருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் கையில் மைக்கை பிடித்துகொண்டு ரோபோ ஷங்கருக்கு முத்தம் கொடுக்கும் பார்த்திபன் ‘மைக்கை கண்டு பிடித்தவர் Emile Berliner, மைக்கை Catch பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement