அது பண்ணத்தெரியும்னு பொய் சொல்லி தான் வாய்ப்பு வாங்குனேன், ஆனா ஸ்பாட்ல தான் அவருக்கு தெரிஞ்சது – முதல் பட வாய்ப்பு குறித்து Sk.

0
152
Sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, இவர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். முதலில் இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் டாக்டர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் அமைந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். டாக்டர் படத்தின் கதாநாயகி பிரியாங்கா அருள்மோகன் தான் இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13ஆம் தேதி வர உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்து உள்ள படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படங்கள்:

தற்போது இந்த படத்தின் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி பிசியான நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பழைய பேட்டி வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்,

-விளம்பரம்-

மெரினா படம் பற்றிய தகவல்:

சிவகார்த்திகேயன் முதன் முதலாக ஹீரோவாக நடித்த மெரினா படம் குறித்த வீடியோ. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மெரினா. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஓவியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் பைக் வீலிங் காட்சி ஒன்று வந்திருக்கும். இது குறித்து தான் நேர்காணல் பேட்டியில் சிவகார்த்திகேயனிடம் உங்களுக்கு பைக் வீலிங் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் கூறியிருந்தது, பாண்டி சார் படத்தின் கதை பற்றி சொல்லும் போது உங்களுக்கு பைக் வீலிங் தெரியுமா? என்று கேட்டார்.

மெரினா படம் குறித்து சிவா சொன்னது:

நானும் தெரியும் காலேஜ் படிக்கும்போது பண்ணி இருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், அந்த காட்சி எடுக்கும்போது வண்டியை முறுக்கினேன் சவுண்ட் மட்டும் தான் வருகிறதே தவிர வண்டி மூவ் ஆகவில்லை. உடனே இயக்குனர் என்னை பார்த்து முறைக்கிறார். பொய் சொல்லி நடிக்க வந்துட்டியா என்பது போல அவருடைய ரியாக்சன் இருந்தது. பின் இதையே கான்சப்ட் ஆக வைத்து கொள்ளலாம் சார் என்று சொன்னேன். அவரும் சரி என்று அந்த ஸ்பாட்டில் அந்த சீன் உருவானது என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்த பேட்டி வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement