ரோஜா சீரியல் நடிகர் சுபு சூர்யனின் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதவரை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் சூப்பர்ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று தான் ரோஜா. இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்தது. மேலும், இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தவர் சிபு சூரியன்.
இதில் நாயகியாக ப்ரியங்கா நல்காரி நடித்து இருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் தான் சிபு சூரியன் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடாவிலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் நாடகங்களில் முறையாக சேர்ந்து கற்று கொண்டார்.
பின் இவர் 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் தான் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு தமிழில் சன் டிவியில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரோஜா சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சந்திரலேகா, லட்சுமி ஸ்டோர்ஸ், பூவே உனக்காக, அன்பே வா, கண்ணான கண்ணே போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாவின் 1000ஆம் பதிவில் சிபு சூர்யன் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அதில் ‘என் உலகம், என் இதயம், என்னுடைய எல்லாம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.ஆனால், அந்த புகைப்படத்தில் கூட தன் மனைவியின் முகத்தை சிபு காட்டவில்லை. ஆனால், பேட்டி ஒன்றில் தன் மனைவி குறித்து பேசிய சிபு ‘சீரியலில் ரொமான்டிக் காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் தன் மனைவி போசசீவ் ஆகிவிடுவார்’ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டு சிபு சூர்யனுக்கு குழந்தை பிறந்து இருந்தது. தன் மகனுக்கு ‘shayan’ என்று பெயர் வைத்துள்ளார்.
சிபுவிற்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. ஆனால், இதுவரை அவரின் மனைவியின் புகைப்படத்தை சிபு வெளியிட்டது இல்லை. இப்படி ஒரு நிலையில் சிப்பு சூர்யன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை முதன் முறையாக வெளியிட்டுள்ளார். ரோஜா சீரியலுக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடித்து வந்தார் சிப்பு. அதற்கு பிறகு இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியல் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலின் பெயர் சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ். இந்த சீரியலில் தான் கதாநாயகனாக சிபு சூரியன் கமிட்டாகி இருக்கிறார்.இதில் இவருக்கு ஜோடியாக சீரியல் நடிகை வைஷ்ணவி நடிக்க இருக்கிறார். இவர் முதன்முதலாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருந்த மலர் என்ற சீரியலில் தான் நடித்திருந்தார். இந்த சீரியல் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை.தற்போது இந்த சீரியல் குறித்த அப்டேட்டுகள் தான் வெளியாகி இருக்கிறது.