முண்டா பனியன் மடித்து விட்ட லுங்கி – வைரலாகும் ரோஜா சீரியல் நடிகையின் கிளாமர் புகைப்படங்கள்.

0
4841
roja-serial

தெலுங்கு திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘அந்தாரி பந்துவையா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஷர்வானந்த் நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக பத்ம ப்ரியா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இது தான் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி. அதன் பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்தார் நடிகை பிரியங்கா நல்காரி.

- Advertisement -

தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பிரியங்கா நல்காரி, தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘காஞ்சனா 3’. பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தினை இயக்கி, நடித்திருந்தார். இதில் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித் திரைக்கு பிறகு சின்னத் திரையிலும் கால் பதித்தார். முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் ‘ரோஜா’. இதில் ஹீரோயினாக நடிகை பிரியங்கா நல்காரி தான் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மூலம் பிரியங்காவிற்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பிரியங்கா நல்காரியின் படு கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

-விளம்பரம்-

அதில் சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி பிரியங்கா போஸ் கொடுத்திருக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதே போல லுங்கி மற்றும் முண்டா பனியனில் இவர் கொடுத்த கிளாமர் போஸ்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement