சீரியல்லதான் வில்லி, ஆனால், நிஜத்தில்.மேடையில் கதறி அழுத ரோஜா சீரியல் நடிகை.

0
8108
shamli
- Advertisement -

சினிமா நடிகர்களை போலவே தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலம் தான். உண்மையை சொல்லப்போனால் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தான் மக்கள் மனதில் ஆழமாகப் பதிகிறது. மேலும், அவர்கள் தங்களுடைய வீட்டில் ஒருவராகவே பாவித்து வருகிறார்கள். ஆனால், சீரியலில் வில்லன் மற்றும் வில்லியாக நடிபவர் நிலைமை தான் கொஞ்சம் பாவம். மக்கள் அவர்களை அந்த கதாபாத்திரத்திலே பார்ப்பதால் எப்போதும் அவர்களைத் திட்டி, சாபம் கொடுத்து வருகிறார்கள். அதோடு பொது இடத்தில் பார்க்கும் போதும் அவர்களை திட்டி தீர்க்கிறார்கள்.

-விளம்பரம்-
Image result for roja serial shamili

- Advertisement -

இது தான் வில்லன், வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு நடக்கும் நிகழ்வு. சமீபத்தில் தான் சன் டிவி தொடர்களில் நடிக்கும் நடிகர்களை கௌரவிக்கும் வகையில் சன் டிவி நிறுவனம் சன் குடும்ப விருது விழாவை நடத்தினார். அதில் இளம் வில்லியாக ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகை ஷாமிலிக்கு விருது வழங்கப்பட்டது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாமிலி. இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாசிட்டிவ், நெகட்டிவ் என எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நுழைந்து மூன்று வருடங்களில் 20 சீரியலுக்கு மேல் நடித்து உள்ளார். இவர் சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : கரீனா கபூரின் குழந்தையை பார்த்துக்கொள்பவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா ?

நடிகை ஷாம்லி முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த முதல் சிரியலிலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் அதிகமாக தொடர்களில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இது குறித்து கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அவர் கூறியது, நான் வில்லி கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு காரணம் யாரையும் தொட்டு, கட்டிப் பிடித்து நடிக்க வேண்டும். இந்த காரணத்தினால் தான் வில்லியை தேர்ந்தெடுத்தேன் என்று கூறியிருந்தார். சன் குடும்ப விருது விழாவில் நடிகை ஷாமிலி இளம் வில்லிக்கான விருதை வாங்கினார்.

-விளம்பரம்-

அதை வாங்கிய நடிகை ஷாமிலி மேடையிலேயே கதறி அழ ஆரம்பித்தார். அதை பார்த்து பல பேர் கண் கலங்கினார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் அவர் கூறியது, என்னுடைய அம்மா என்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகர்களை பார்த்து இவர்கள் நல்லா நடிக்கிறாங்க, அவர்கள் நல்லா நடிக்கிறாங்க என்று கூறுவார். ஆனால், ஒரு நாள் கூட என்னை பார்த்தது பாராட்டியது கிடையாது. அதோடு என் நடிப்பை பற்றிப் பேசியதும் கிடையாது. நான் இந்த விருதை வாங்கியது உங்களுக்கு பிடிக்குமா என தெரியலை என்று சொல்லி அழ தொடங்கினார். இதை பார்த்து அரங்கத்தில் உள்ள அனைவருமே கண் கலங்கினார்.

Advertisement