சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபாலன் என்ற அந்த ஆசிரியர், மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.
23.5.2021-ல் பள்ளியின் டீனுக்கு முன்னாள் மாணவிகள் தரப்பில் ஒரு பரபரப்பான புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை பள்ளி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் இந்த சர்ச்சை சமூக வலைதளத்தில் வெடிக்க ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் பாருங்க : தன்னுடைய வீடியோவை பிளாக் செய்த பாகிஸ்தான் அரசு – மியா கலீபா கொடுத்த பதிலடிய பாருங்க.
அவர் மீது போஸ்க்கோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதே போல மாணவிகளுக்கு ஆபாசமாக நடந்துகொண்டது உண்மை தான் என்றும் ராஜகோபாலன் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆசிரியரின் இந்த மோசமான செயல் சமூகவலைதளத்தில் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா இந்த விவரகரத்தில் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.
மேலும், PSBB பள்ளி பற்றியும் சில பதிவுகளை போட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் ஒரு சிலர் நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே…நீங்களே இப்படி பேசலாமா என்று கேள்வியை கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள ஷர்மிளா, பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல என்று செருப்படி பதில் கொடுத்துள்ளார்.