ரோஜா சீரியலின் கடைசி எபிசோட் குறித்து சிபு போட்ட உருக்கமான பதிவு – வருத்ததில் ரசிகர்கள்.

0
561
- Advertisement -

ரோஜா சீரியலின் கடைசி எபிசோட் குறித்து ரோஜா சீரியல் நாயகன் சிபு பதிவு ஒன்றை போட்டுள்ளார். தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை.

-விளம்பரம்-

டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த சீரியல் தான் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது. இதனால் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

- Advertisement -

ரோஜா சீரியல்:

மேலும், 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த தொடரில் வில்லியாக ஷாமிலி நடித்து இருந்தார். பின் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். இவருக்கு பதில் தற்போது வில்லி அனு என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடித்து வருகிறார்.

சீரியலில் விலகிய சிபு சூர்யன்:

இந்தநிலையில் ரோஜா சீரியல் இருந்து சிபு சூர்யன் திடீரென விகுவதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். சிபு சூரியன் விலகுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருந்தது. இவரின் இந்த பதிவை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் பலர் சீரியலை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் தொடருவதாக அறிவித்தார் சிபு .

-விளம்பரம்-

சிபுவின் உருக்கமான பதிவு :

இப்படி ஒரு நிலையில் ரோஜா சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. சீரியலின் கடைசி எபிசோட் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கும் சிபு ”இன்று தான் ரோஜா சீரியலின் எனது கடைசி நாள், அர்ஜுன் சாராக எனது கடைசி நாள். எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனருக்கு நன்றி. அதோடு எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்று உருகாமுடன் பதிவிட்டுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது டாப் TRPயில் இருக்கும் தொடர்களில் இந்த சீரியலும் ஒன்று. இதுவரை 1310 எபிசோடுகளை இந்த சீரியல் கடந்து இருக்கிறது. இந்த தொடருக்கு பின்னர் சிபு மீண்டும் சீரியலில் தொடருவாரா இல்லை சினிமாவில் நடிக்க சென்றுவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement