தன் கணவருடன் ரொமான்ஸ் செய்த ரோஜா சீரியல் நடிகை ப்ரியங்கா- வைரலாகும் புகைப்படம்

0
279
- Advertisement -

ரோஜா சீரியல் நடிகை தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போட்ட தொடர்களில் ரோஜா சீரியலும் ஒன்று. இந்த தொடர் கடந்த 2018 ஆம் ஆ ண்டு துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. மேலும், ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா.

-விளம்பரம்-

இவர் முதலில் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்த வருகிறார்.

- Advertisement -

பிரியங்கா திரைப்பயணம்:

இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே நடிகை பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை காதலித்து வந்தார். பின் பிரியங்காவிற்கும் ராகுலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்தம் முடிந்தது. இவர்களின் திருமண நிட்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்றுபோனதாக தகவல்கள் வெளியானது . இதுகுறித்து பேசி இருந்த பிரியங்கா, ஒரு சில காரணங்களால் கல்யாண தேதி தள்ளிக்கொண்டே போனது.

பிரியங்கா காதல் விவகாரம்:

ஹைதராபாத்திலிருந்து மலேசியா சென்ற ராகுல், என்னை இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை. கடைசி முயற்சியாக மிகவும் கஷ்டப்பட்டு அவரை போனில் தொடர்பு கொண்டேன். ஆனால், எந்த பயனும் இல்லை. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சிருச்சு. இனிமேல் அவரவர் வாழ்க்கையை பார்த்து செல்ல வேண்டியதுதான் என்று கூறி இருந்தார். பின் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “எல்லாத்துக்கும் சாரி, எப்படா வருவ? நான் உனக்காக காத்துட்டு இருக்கேன்டா”, என்று காதலனை நினைத்து ஒரு உருக்கமான பதிவை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

பிரியங்கா-ராகுல் திருமணம்:

இதனை தொடர்ந்து இருவரும் ஒரே துறையில் பிஸியாக இருந்ததால் ராகுல் இந்தத் துறை வேண்டாம் என முடிவெடுத்துவிட்டு மலேசியாவில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். இப்படி ஒரு நிலையில் ப்ரியங்காவிற்கும் ராகுலுக்கு விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் பிரியங்கா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

பிரியங்கா லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்த நிலையில் பிரியங்கா பகிர்ந்து இருக்கும் ரொமான்ஸ் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரியங்கா தன் கணவர் ராகுலுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தான் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர்கள் இருவரும் அம்பு விடுவது போல் ரோமன்ஸ் செய்து இருக்கிறார்கள். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Advertisement