ரோஜா சீரியல் சிபுவிற்கு குழந்தை பிறந்தது, என்ன பெயர் வைத்துள்ளார் பாருங்க. அட, இவங்க தான் அவரின் மனைவியா.

0
1517
roja
- Advertisement -

ரோஜா சீரியல் நாயகன் சிபு சூரியனுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான்.அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது. அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

சிபுவிற்கு பிறந்த மகன் :

இப்படி ஒரு நிலையில் சிபு சூர்யனுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. தன் மகனுக்கு ‘shayan’ என்று பெயர் வைத்துள்ளார். சிபுவிற்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. ஆனால், இதுவரை அவரின் மனைவியின் புகைப்படத்தை சிபு வெளியிட்டது இல்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாவின் 1000ஆம் பதிவில் சிபு சூர்யன் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘என் உலகம், என் இதயம், என்னுடைய எல்லாம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நிறத்தை வைத்து கேலி செய்தவர்களுக்கு பதிலடி – சுந்தரிகும், கண்ணம்மாவுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

மனைவியை வெளியில் காட்டாத சிபு :

ஆனால், அந்த புகைப்படத்தில் கூட தன் மனைவியின் முகத்தை சிபு காட்டவில்லை. ஆனால், பேட்டி ஒன்றில் தன் மனைவி குறித்து பேசிய சிபு ‘சீரியலில் ரொமான்டிக் காட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் தன் மனைவி போசசீவ் ஆகிவிடுவார்’ என்று கூறிஇருந்தார். இப்படி ஒரு நிலையில் சிபுவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சிபு ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

மனைவி குறித்து சிபு போட்ட பதிவு :

இது தொடர்பாக அவர்தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்தது என்னவெனில், நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நான் நடிப்பேன். அதிகம் யோசித்து, புரோடக்சன் டீம் அனுமதியுடன் நான் இன்னொரு பயணத்தை தொடங்குகிறேன்.குட்-பை சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், சில நேரங்களில் அது மிக அவசியமான ஒன்றாகிறது. அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்.

சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சிபு :

என் மனதிற்கு நெருக்கமான தொடர்பு மற்றும் அன்பிற்கு நன்றி. புது பிராஜெக்ட் உடன் உங்களை என்டர்டைன் செய்கிறேன். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசிர்வாதம் எனக்கு தேவை என்று பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்த பதிவை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் பலர் சீரியலை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இப்படி ஒரு நிலையில் தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் தொடருவதாக அறிவித்து இருந்தார்.

மீண்டும் வந்த சிபு :

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் ‘கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களிடம் இருந்து ஏராளமான போன் கால்கள், போஸ்ட்கள், மெசேஜ்கள், கோரிக்கைகள் என தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. என் மீது நீங்கள் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு நன்றி. உங்களின் அனைவரின் கோரிக்கையை ஏற்று ரோஜா சீரியலில் உங்களின் ஃபேவரைட் அர்ஜுன் சாராக தொடருவது பற்றிய யோசிக்கிறேன். சீரியலில் விலகும் முடிவையும் மறு பரிசீலனை செய்கிறேன்’ என்று கூறி இருந்தார். ஒருவேளை மகன் பிறந்ததால் தான் சிபு சீரியலில் இருந்து விலக முடிவிடுத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement