ராஜமௌலி இயக்கி வரும் ‘RRR’ பட முக்கிய நடிகருக்கு விபத்து.! படபிடிப்புகள் நிறுத்தம்.!

0
421
RRR

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜ மௌலி. தற்போது மற்றுமொரு பிரம்மாண்ட படத்தை இயக்கிவருகிறார். ஆர் ஆர் ஆர் என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட எஸ்.எஸ். ராஜமுௗலின் அடுத்த பெரிய முயற்சிகளுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

Image result for ramcharan rrr

இந்த படத்தை பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகியிருந்தது. மேலும், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்த்து. இந்த படத்தில் என் டி ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய நடிகர்களாக நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : நீங்க கிண்டல் செய்யுங்க எந்த பிரச்னையும் இல்ல.! என்ன மனுஷன்யா அஜித்.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நாடிகளின் விவரத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ராஜமௌலி, இந்த படத்தில் இந்தி நடிகர்களான ஆலியா பட், கஜோல் கணவர் அஜய் தேவ்கன், ஹாலிவுட் நடிகை டெய்ஸி எட்கர்-ஜோன்ஸ் போன்றவர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முக்கிய நடிகர் ராம் சரண் உடற் பயிற்சி செய்யும் போது கையில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் குணமாகும் வரை படப்பிடிப்பு நடக்காது என்று படக்குழு ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement