நீ ஒரு மட்டமான ஆளு, உனக்கு மரியாதை இல்ல – ‘ருத்ர தாண்டவம்’ கதை திருட்டு விவகாரம். லீக்கான ஆடியோ உரையாடல்.

0
19754
mohan
- Advertisement -

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தாரி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. மேலும், இந்த படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் பட ரிலீஸ் காண வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றார்கள். சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளை பிரபல பிரமுகர்கள் பார்த்து நல்ல விமர்சனங்களை பேட்டியில் சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த படம் ஒரு அட்ட காப்பி என்றும், இயக்குனர் மோகன் மட்டமான ஆளு என்றும் இயக்குனர் ஆறு பாலா பேசிய ஆடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் ஆறு பாலா அவர்கள் மோகன் ஜி அவர்களிடம் தான் எடுக்கும் படத்தின் கதையை பற்றி சொல்லியிருக்கிறார். மோகனும் சரி சொல்லி விட்டு ஆறுபாலா இயக்கம் கதையோட PCR கான்செப்ட்டை அவர் தன்னுடைய ருத்ர தாண்டவம் படத்தில் வைத்து இருப்பதால் ஆறு பாலா அவர்கள் இயக்குனர் மோகனுக்கு கால் செய்து பேசி இருக்கிறார். அந்த ஆடியோவில் மோகன், ஆறு பாலா பேசியது இதோ, மோகன் அவர்கள் இந்த PCR கான்செப்ட் என்னுடைய படத்தோட கான்செப்ட் கிடையாது.

இதையும் பாருங்க : உனக்கென நான் பாட்டு ரிஹானா பாட்டின் காப்பியா ? பல ஆண்டு கழித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி.

- Advertisement -

ஒரு இன்ட்ரோக்காக தான் வைத்து உள்ளேன். உடனே பாலா உங்கள் கான்சப்ட் இல்லை என்றால் அது வைக்கவே தேவையில்லை. நான் தான் அதை பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தேனே. தயாரிப்பாளர் கிடைத்தவுடன் படத்தை உடனே இயக்கப் போகிறேன் என்று சொன்னேன். உங்களை ஒரு ஆள் என்று நம்பி நான் படத்தைப் பற்றி உங்களிடம் சொன்னேன் என்று சொன்னார். உடனே மோகன் அவர்கள் நீங்கள் சொல்வது எல்லாம் பார்த்தால் நீங்கள் சொன்னதை கேட்டு நான் படம் பண்ணது போல் சொல்கிறீர்கள். நீங்கள் என்ன கதை எடுக்கப் போகிறீர்கள் கூட எனக்கு தெரியாது. நீங்க 4 பசங்களை வைத்து பிசிஆர் கதை பண்ண போகிறார் என்று சொன்னீர்கள்.

நானும் என் படத்தில் இண்ட்ரோக்காக வைக்க போகிறேன் என்று கூறினார். உடனே பாலா அவர்கள் நீங்கள் அதை எல்லாம் சொல்லவே இல்லை. நான் PCR கான்சப்ட் பண்ணுகிறேன் என்று சொல்லியும் நீங்கள் அதை செய்து இருக்கிறீர்கள். இதெல்லாம் சரி இல்லை. என்னுடைய கான்செப்ட் வைத்து படம் பண்ணினால் நான் எப்படி படம் பண்ண முடியும். உங்களை காப்பி பண்ணறது தானே சொல்வார்கள். நான் உங்களை ரொம்ப பெருசாக மதித்தேன். ரொம்ப மட்டமாக இருக்கீங்க. நீங்க எல்லாம் ஒரு ஆளுன்னு நினைத்து உங்க கிட்ட சொன்னேன். உங்களை ரொம்ப மரியாதையாக நினைத்து இருந்தேன். அசிங்கமா என் வாயிலிருந்து வந்துரும் போல இருக்கு வேண்டாம் விட்டுடுங்க மட்டமான புத்தி உங்களுக்கு என்று தாறுமாறாக மோகனை விலாசி உள்ளார். உண்மையாலுமே இந்த படம் காப்பியா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement