எப்படி இருக்கிறது RJ பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ – விமர்சனம் இதோ.

0
972
Runbabyrun
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி இவர் நடித்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம் போன்ற திரைப்படங்களில் இவர் முன்னணி கதாபாத்திரமாகவும் கதாநாயகனாகவும் நடித்திருந்தால் இப்படங்கள் நல்ல வெற்றியை அவருக்கு கொடுத்து என்பது குறிப்பிடதக்கது. இப்படி திரில்லரான கதையை தேடும் இவர் தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் “ரன் பேபி ரன்” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இப்படத்தில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா, இஷா தல்வார் மற்றும் அதன் இயக்குனர் என பலரும் நடித்திருகின்றனர்.

-விளம்பரம்-

கதைக்களம் :

ஆர்.ஜே பாலாஜி தன்னுடைய வழக்கமான கதையை தேர்வு செய்யும் முறையில் இருந்து மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரியாமல் ஏறி உதவி கேட்கிறார். அப்படி உதவி செய்யும் பாலாஜி ஒரு மீட்டிங் முடிந்ததும் தூங்கி விடுகிறார். இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது வீட்டில் பிணமாக கிடக்கிறார். இப்படி பிணமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சடலத்தை ஆர்.ஜே. பாலாஜி என்ன செய்தார். அவர் ஏன் இறந்தார் என்பதை கண்டுபிடித்தாரா? இந்த பிரச்னையில் இருந்து ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் வந்தாரா? என்பதுதான் மீதி கதை.

- Advertisement -

பொதுவாக திரில்லர் படங்கள் என்றாலே அது மலையாள படங்கள் தான் என்று மக்கள் கொரோனாவின் போது ஒடிடியில் பார்த்து தெரிந்து கொண்டனர். அப்படி மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான இப்படம் திரில்லராக இருந்ததா? என்றால் அது கேள்விக்குறிதான். தன்னுடைய பொதுவான நடிக்கும் பாணியில் இருந்து கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலாஜியின் முகம் இப்படத்திற்கு சரியாக ஒத்துப்போகவில்லை. மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு என்ன தேவையோ அதனை செய்திருக்கின்றனர்.

இப்படத்தில் கதாநாயகிகளாக வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், ஸ்மிருதி வெங்கட், இஷா தல்வார் போன்றவர்கள் மூன்று நிமிடத்திற்கு மேலே படத்தில் இடம் பெறவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சில சென்டிமெண்டான வசனங்களாவது கிடைத்து மற்றவர்களுக்கு அதுவும் கிடையாது. தொடக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இவரில் காரில் ஏறும் போது அலறிய பாலாஜி, அவரை பிணமாக கொண்டு செல்லும் போது அமைதியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வண்டியின் டிரைவரும் சாதாரணமாக ஓட்டுகிறார். இது உண்மை தன்மையை குறைக்கிறது.அதேபோல படத்தில் ட்விஸ்ட என்ன என்பதை முன்பே கணிக்க முடிகிறது. இசையமைப்பாளர் படத்திற்கு வலுவூட்ட திரில்லர் இசையை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இன்னும் பதட்டமாக இருந்திருந்தால் கதைக்கு கொஞ்சம் உயிரூட்டி இருக்கும்.

மேலும் இதில் டி.எஸ்.பியாக வரும் தமிழ் இந்த மர்மத்தை கண்டறிவார் என பார்த்தார் கதையில் திடீர் ஜேம்ஸ் பாண்டாக மாறும் ஆர்.ஜே.பாலாஜி உண்மையை கண்டறிகிறார். கடைசியாக வரும் கிளைமாக்ஸ்ல் மட்டும் கதையில் சொல்ல வந்த கருத்தை சொல்லி இருக்கிறது. மொத்தத்தில் இப்படம் 2 மணிநேரம் 10 நிமிடங்கள் மட்டுமே ஓடியது என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

Advertisement