வாணி ராணி சீரியல் நடிகரா இப்படி பீர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். என்னவா இருக்கும்?

0
14374
arunrajan
- Advertisement -

தற்போதெல்லாம் ரசிகர்கள் வெள்ளித்திரை படங்களை விட சின்னத்திரை தொடர்களை தான் அதிகம் ரசித்து வருகிறார்கள். இதற்காகவே ஒவ்வொரு சேனலும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடையது சேனல்களில் புதுப் புது வித்தியாசமான கதை களத்து உடன் தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான சேனலாக சன் தொலைக்காட்சி நிறுவனம் விளங்கி வருகிறது. மேலும், சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பாகி உள்ளது. முன்பெல்லாம் குடும்பப் பெண்கள் மட்டும் தான் சீரியல் கதைகளை ரசித்து பார்ப்பார்கள்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களை பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி விட்டது. இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகப் பிரபலமான சீரியல் “வாணி ராணி”. இந்த சீரியல் மிகப் பெரிய நெடுந் தொடர் சீரியல் என்று சொல்லலாம். இந்த சீரியலை நடிகை ராதிகாவின் ராடான் மீடியா தான் தயாரித்து உள்ளது. மேலும், இந்த சீரியல் ஜனவரி 21ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. ராதிகா அவர்கள் இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க :நட்சத்திர ஹோட்டலில் விபச்சார வழக்கில் கைதான பிக் பாஸ் பிரபலத்தின் காதலி.

- Advertisement -

இந்த சீரியலில் வேணு அர்விந்த், பப்லு பிருத்விராஜ், நீலிமா ராணி, அருண் குமார், விக்கி கிரிஷ், மானச் சவளி, நவ்யா, நேஹா, சாந்தி வில்லியம்ஸ் போன்ற பலர் நடித்து உள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பகுதிகளில் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையும் இந்த வாணி ராணி சீரியலுக்கு தான் சேரும். இந்த சீரியல் ஆறு வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியல் 1700 க்கும் அதிகமான எபிசோடுகளை தாண்டி சென்றது என்று சொல்லலாம்.

இந்நிலையில் வாணி ராணி சீரியலில் நடிகர் அருண் ராஜன் அவர்கள் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் அழகி, சந்திரலேகா, ஈஸ்வரி, இளவரசி, கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பல சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீர் மற்றும் ஆரஞ்சு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால், எதற்காக இப்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. சமீபத்தில் தான் இவர் திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று உள்ளார்.மேலும், இவர் தன்னுடைய புத்தாண்டை கொண்டாடும் விதமாக புனித தலங்களுக்கு சென்று கொண்டாடிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement