தல அழைத்தால் வில்லனாக நடிக்க ரெடி. அஜித்தை வைத்து இயக்கிய இவரே சொல்லிட்டாரே.

0
8673
valimai
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் தல அஜித். மேலும்,அஜித் அவர்களின் புதிய படமான “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,இந்த வருடம் தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. அதோடு இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து மற்றொரு படம் உருவாகி வருகிற தகவலும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எனவும் தெரிய வந்து உள்ளது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த வலிமை படத்திற்கான பூஜைகளும் கடந்த அக்டோபர் மாதமே போடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தல அஜித் அவர்கள் வலிமை படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர். இதனைத்தொடர்ந்து ‘விஸ்வாசம், வீரம், விவேகம், வேதாளம், நேர்கொண்ட பார்வை’ போன்ற பல படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைலில் நடித்த நம்ம தல அஜித் அவர்கள் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும்,வலிமை படம் அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

இதையும் பாருங்க : நடிகை மீனா வீட்டை வாங்கிய சூரி. எத்தனை கோடி கொடுத்து வாங்கியுள்ளார் தெரியுமா ?

அதோடு மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார் பந்தய காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெறும் என்ற ஒரு அற்புதமான தகவலையும் தெரிவித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தில் தல அஜித் அவர்கள் இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் அதுவும் போலீசாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் ஹீரோயினி குறித்த தகவல் தான் இன்னும் அதிகார பூர்வமாக தெரியவில்லை. ஆனால்,ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. மேலும்,இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது என்ற தகவல் வெளி வந்தது.

-விளம்பரம்-
Image result for valimai"

மேலும், இந்த படத்தில் ஹீரோயினி தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என தெரிய வந்து உள்ளது. மேலும், மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் எனவும் தெரிய வருகிறது. இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியது, எனக்கு தற்போது வரை அப்படி எந்த ஒரு வாய்ப்பும்,தகவலும் கிடைக்கவில்லை. அப்படி ஒரு வேளை என்னை வலிமை படத்தில் நடிக்க கூப்பிட்டால் நான் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியிருந்தார்.

Advertisement