எனக்கும் கமலுக்கும் ஒரு ஹைலைட் சீன் இருக்கு – ‘இந்தியன் 3’ புதிய அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

0
67
- Advertisement -

‘இந்தியன் 2’ படத்தில் தனக்கும் கமலுக்கும் இடையிலான காட்சியை பற்றி நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ள தகவல்தான் இப்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கமலஹாசன். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியன் ‘ படம் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனால் இந்த படத்தில் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ படம் உருவாகி உள்ளது.

- Advertisement -

இந்தியன் 2 படம்:

‘இந்தியன் 2’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘இந்தியன் 2’ படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கமலுக்கு எதிராக 7 வில்லன்கள்:

சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தசாவதாரம் படத்தைப் போல கமல் இப்படத்தில் பல தோற்றங்களில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. மேலும், இப்படத்தில் கமலுக்கு எதிராக மொத்தம் ஏழு வில்லன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. ஒவ்வொரு வில்லனையும் ஒவ்வொரு தோற்றத்தில் சேனாதிபதி பழி வாங்கும் காட்சிகள் இப்படத்தில் அமைந்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

எஸ்.ஜே.சூர்யா கூறியது:

மேலும், இதில் கமல் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இடையிலான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனடையில் மலேசியாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.ஜே சூர்யா ‘இந்தியன் 2’ படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். அதில், ‘இந்தியன் 2 படத்தில் நான் குறைவான காட்சிகளிலேயே நடித்திருக்கிறேன். ஆனால் 3 ஆம் பாகத்தில் எனக்கும் கமலுக்கும் இடையில் ஒரு ஹைலைட்டான காட்சி உள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியன் 3:

இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பை இயக்குனர் சங்கர் முடித்துள்ளார். இரண்டாம் பாகம் வெளியான அடுத்த சில மாதங்களிலே மூன்றாம் பாகத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 3 படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது என்றும் அனிருத் இசையமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் 2025 ஆம் வருடம், ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement