தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருந்தவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார்.
https://www.youtube.com/watch?v=ItTXW7pmhnc
இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனால் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு மெலிந்து போயிருந்தார். பின் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்து பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார். சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கர் சென்னையில் சினிமா சூட்டிங்கில் மயங்கி கீழே விழுந்திருந்தார்.
ரோபோ சங்கர் மறைவு:
இதனால் பதறிப் போன பட குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள்.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருந்தார்கள். இருந்துமே சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார். இவருடைய இழப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது.
இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும், ரோபோ சங்கர் உடைய இறுதி ஊர்வலத்தில் அவருடைய மனைவி பிரியங்கா நடனமாடி வழி அனுப்பி இருந்தார். இதை பார்த்த பலர் விமர்சித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனரும் நடிகருமான எஸ்வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=TiyoQsg-wTk
எஸ்.வி.சேகர் பேட்டி:
அதில் அவர், ரோபோ ஷங்கர் உடைய மனைவி பிரியங்கா அவருடைய கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதை பலர் தவறாக விமர்சித்து வருகிறார்கள். இதெல்லாம் ஒரு கலாச்சாரமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். ஒருவருடைய இழப்புக்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அந்த இழப்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்ல யாருக்குமே உரிமை கிடையாது. சில பேர் வீட்டில் இறப்பு என்றால் சப்தம் போட்டு அழுவார்கள். இன்னும் சிலர் அமைதியாக அழுவார்கள். அதற்காக அவர்களுக்கு சோகம் இல்லை என்று சொல்ல முடியாது. ரோபோ சங்கர் உடைய இறுதி பயணத்தின் போது இனி அவரை பார்க்க முடியாது என்ற துக்கத்தின் வெளிப்பாட்டை தான் பிரியங்கா நடனம் ஆடி காட்டியிருக்கிறார்.
“ROBO SHANKAR” pic.twitter.com/AJ2b5Vo9o0
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) September 21, 2025
விமர்சனங்களுக்கு பதிலடி:
அதை விமர்சிக்க யாருக்குமே அருகதை கிடையாது. அவர் ஒன்றும் தன்னுடைய கணவர் மரணத்திற்காக உங்கள் வீட்டு வாசலில் நின்று நடனம் ஆடவில்லை. சோசியல் மீடியா இருப்பதற்காக யாரையும் புண்படுத்தாதீர்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரோபோ சங்கரின் மரணம் அவருடைய மனைவிக்கு கொடுக்க முடியாத பாதிப்பை யாராலும் ஈடு கட்ட முடியாது. தயவு செய்து அடுத்தவர்களுடைய சோகத்தையும் துக்கத்தையும் விமர்சனம் செய்யாதீர்கள். அந்த துக்கத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவரவர் மனோபாவம். அது அவருடைய குடும்ப விஷயம் என்று கூறி இருக்கிறார்.





