கனா படத்தில் சச்சின் இந்த கதாபாத்திரத்தில் தோன்றுவார்..!இயக்குனர் அருண்ராஜா காமராஜ்..!

0
728
Arunraja
- Advertisement -

பிரபல பாடகரான அருண்ராஜா காமராஜ் ‘கனா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்த படத்தை அவரது நண்பரும் நடிகருமான  சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். 

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இதையும் படியுங்கள் : கனா படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மேற்கொண்ட பயிற்சி 

- Advertisement -

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடுத்தர குடும்பப்பெண் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். இதற்காக அவர் பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். 

முழுக்கு முழுக்கு கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இருக்கிறாராம். அவசரபடாதீங்க இந்த படத்தில் சச்சின் என்ற கதாபாத்திரத்தில்  சௌரிமுத்துவும், டெண்டுல்கர் என்ற கதாபாத்திரத்தில் ஆண்டனி பாக்யராஜும் நடித்துள்ளனர் என்றும் சச்சின் ஒரு காமிக் கதாபாத்திரமாக தோன்றுவர்  என்றும்  கூறியுள்ளார் அருண் ராஜா காமராஜ் .  

-விளம்பரம்-
Advertisement