உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை – ‘தண்டேல்’ நிகழ்ச்சியில் சாய் பல்லவியின் பேச்சால் வருத்தத்தில் ரசிகர்கள்

0
243
- Advertisement -

பிரபல நடிகை சாய் பல்லவி, இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவை பாராட்டி பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்ன பல மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் தெலுங்கில் ‘தண்டேல்’ என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனர் சந்தூ மொண்டேடி இயக்கி இருக்கும் இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் சேமித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி சாய்பல்லவியை புகழ்ந்து பேசி இருந்தார்.

- Advertisement -

சந்தீப் ரெட்டி பேசியது:

அதில், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் முதலில் நான் சாய்பல்லவியை நடிக்க வைக்கலாம் என்று எண்ணி, கேரளாவில் இருந்த மேனேஜர் ஒருவரை தொடர்பு கொண்டு, சாய் பல்லவியை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும். அந்தப் படத்தில் அதிகமாக ரொமான்டிக் காட்சிகள் இருக்கும் என்றேன். அதற்கு அவர், சாய் பல்லவியை நடிக்க வைப்பதை மறந்து விடுங்கள். அவர் ஸ்லீவ்லெஸ் ஆடையை கூட அணிய மாட்டார் என்று கூறிவிட்டார். காலப்போக்கில், வாய்ப்புகளுக்காக கதாநாயகிகள் மாறி வருகிறார்கள். ஆனால், சாய் பல்லவி சிறிதும் கூட மாறவில்லை என்பது போல் புகழ்ந்து பேசி இருந்தார்.

சாய் பல்லவி பேசியது:

அதனை தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்களுக்கே உரிதான ஒரு குரல் இருக்கும். ஆனால், சந்தீப் ரெட்டியின் குரல் திரையிலும், நீங்கள் கொடுக்கும் நேர்காணல்களிலும், எங்கு சென்றாலும் பாசாங்கு இல்லாததாக இருக்கிறது. நீங்கள் பாசாங்கு இல்லாதவராக இருக்கிறீர்கள். சில நேரங்களில், மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் மனிதர்களாக, நாம் மன்னிப்பு கேட்க முன் வராத போது, அதுவே ஒரு வெளிப்பாட்டாக மாறும்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கண்டனம்:

மேலும், அந்த விஷயங்கள் சிறப்பானதாக இருக்கும் என்று நீங்கள் உணர்த்துகிறீர்கள். உங்கள் படங்களை மக்கள் எதிர்நோக்குகிறார்கள் என்பது போல் பேசியிருந்தார். தற்போது சாய்பல்லவி பேசியதை கடுமையாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள், முன்னதாக அனன்யா பாண்டே, ‘அர்ஜுன் ரெட்டி’ போன்ற திரைப்படங்களில் நடிகர்கள் வெளிப்படுத்திய நடிப்பு நன்றாக இருந்தாலும், அதுபோன்ற படைப்புகள் எனக்கு உகந்தது இல்லை என்று பேசியதை மேற்கோள் காட்டி வருகின்றனர்.

சந்தீப் ரெட்டி குறித்து:

இயக்குனர் சந்தீப் ரெட்டி, தெலுங்கில் இயக்கிய ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதற்குப் பிறகு இவர் ‘கபீர் சிங்’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் தனது படங்களில் பெண்களை அணுகும் விதத்திற்காக பலத்த எதிர்ப்பை சந்தித்தவர். விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இவர் இயக்கிய படங்கள் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றன. ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் ஆக உருவான ‘கபீர் சிங்’ உலக அளவில் 377 கோடி வசூலித்தது. அதேபோல் ‘அனிமல்’ திரைப்படமும் உலக அளவில் எல்லாரும் கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement