பொதுவா இந்த மாதிரி வதந்திகளை நான் கண்டுக்குறது இல்ல,ஆனா – தனது திருமணம் குறித்த வதந்திக்கு சாய் பல்லவி விளக்கம்.

0
1537
- Advertisement -

சில தினங்களாகவே சாய்பல்லவிக்கு திருமணமாகிவிட்டது என்று வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது இதற்கு பதில் அளிக்கும் வகையில். நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அதன் அதற்கு விளக்கத்தை அளித்துள்ளார்.  தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சாய்பல்லவி திரைப்பயணம்:

கடந்த ஆண்டு சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். இதனை அடுத்து சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கார்கி.

இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலரும் சாய்பல்லவி நடிப்பை பாராட்டி இருந்தார்கள். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதில் எடுக்க பட்ட புகைப்படம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

விளக்கம் அளித்த சாய் பல்லவி:

சில தினங்களாகவே சாய்பல்லவிக்கு திருமணமாகிவிட்டது என்று வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது இதற்கு பதில் அளிக்கும் வகையில். நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அதன் அதற்கு விளக்கத்தை அளித்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் சாய் பல்லவிக்கு அருகில் இருப்பது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அவர் கழுத்திலும் சாய் பல்லவி கழுத்திலும்  மாலை அணிவித்ததால் சிலர் அதனை திருமணம் என்று வதந்தி பரப்பி வந்தனர் ஆனால் அது எஸ்கே 21 திரைப்படத்தின் பூஜை.   இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  

“நான் வதந்திகளை கண்டு கொள்வதில்லை அது பற்றி கவலைப்படுவதும் இல்லை ஆனால் அந்த வதந்தி குடும்ப நண்பர்களை உள்ளடக்கி இருந்ததால் கண்டிப்பாக அதைப்பற்றி நான் பேசிய ஆக வேண்டும் என் படப்பிடிப்பு பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வேண்டும் என்று பணத்திற்காக கேவலமாக இதனை பரப்பி வருகின்றனர். என்னுடைய அடுத்த அடுத்த படம் குறித்து மகிழ்ச்சியான தகவல்களை வெளியிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கம் அளிப்பது வேதனையாக இருக்கிறது” என்றும் அவர் எக்ஸ்ட்ரலத்தில் பதிவிட்டு இருந்தார்.  

Advertisement