சாய் பல்லவிக்கு தேசிய விருது கொடுக்காமல் நித்யா மேனனுக்கு கொடுத்தது தவறு- சாய் பல்லவி ரசிகர்கள் புலம்பல்

0
554
- Advertisement -

பிரபல நடிகை சாய் பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று அவரின் ரசிகர்கள் குமுறும் செய்திதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்று கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதன் பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பழமொழி படங்களில் நடித்து வருகிறார். இதனுடைய 70 ஆவது தேசிய திரைப்பட விழா நடைபெற இருக்கிறது, அதனால் விருதுகளை வாங்கும் படங்களின் பட்டியல்தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் அதிகமான விருதுகளை ‘காந்தாரா’ படம் தான் பெற்றிருக்கிறது.

- Advertisement -

70 ஆவது தேசிய விருது:

தமிழில் பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்டமாக இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்திருக்கிறது. சிறந்த தமிழ் படத்திற்கான விருது பொன்னியின் செல்வன் முதல் பாகம் வென்று இருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைத்திருக்கிறது. மேலும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ரவி வர்மனும், சிறந்த ஒலி அமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் வென்றுள்ளனர்.

திருச்சிற்றம்பலம்- நித்யா மேனன்:

அதனைத் தொடர்ந்து, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இரண்டு விருதுகளை பெற்றிருக்கிறது. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணனுக்கும் ‘மேகம் கருக்குதா’ என்ற பாடலுக்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது. தற்போது, நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்திருக்கும் செய்தி தான் பேசும் பொருள் ஆகியுள்ளது. அதாவது, 2002 ஆம் ஆண்டு தமிழில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ படத்துக்கு எந்த விருதும் தரப்படவில்லை.

-விளம்பரம்-

சாய் பல்லவி ரசிகர்கள்:

இதனால் சாய் பல்லவி ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இது குறித்து தங்களது ஆதங்கத்தை பகிர்ந்து வருகிறார்கள். எங்களுக்கு நித்யா மேனன் மீது கோபம் இல்லை. ஆனால், கார்கி படத்துக்கு ஏதாவது விருது கொடுத்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இது தொடர்ந்து மிகப்பெரிய விருது என்பது பார்வையாளர்களின் அன்பும், அவர்களின் பாராட்டுக்களுமே. அதனால் சாய் பல்லவிக்கு வரும் அன்பை நினைத்து நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எக்ஸ் தளத்தில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

‘கார்கி’ படம் :

இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி ஆழமாக ‘கார்கி’ படத்தில் கூறியிருப்பார்கள். இந்தப் படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ் .சிவாஜி உட்பட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்தப் படத்தில் சாய் பல்லவியின் எதார்த்த நடிப்பும், அழகும் பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement