தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சாய் பல்லவி. தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்கிறார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலம் ஆனார். 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தின் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
அதைத் தொடர்ந்து அவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்து. இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். அதோடு யூடியூபில் அதிகமானோர் இந்த ரவுடி பேபி பாடலை பார்த்ததனால் ரவுடி பேபி பாடல் உலகளவில் சாதனை படைத்தது. இருந்தாலும் இவருக்கு தமிழில் அந்தளவிற்கு பட வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தற்போது தெலுங்கு மொழி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட நடிகை சாய் பல்லவி அவர்களுக்கு அழகு சாதன விளம்பரத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் தருவதாக கூறப்பட்டது. ஆனால், மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்க எனக்கு விரும்பவில்லை கூறி இருந்தார்.
இதையும் பாருங்க : ரசிகர்களை காண வேன் மீது ஏறிய விஜய். கூலிங் கிளாஸை மாட்டி, கெத்தாக எடுத்த செல்ஃபீ. தெளிவான வீடியோ இதோ.
இதனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயர் இடம்பெற்று உள்ளது. இது வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த பட்டியலில் வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐந்து பெண்களில் இவரும் ஒருவர்.
இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகளை குவிந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து அவர் கூறியது, தன்னை பெருமைப்படுத்திய போர்ப்ஸ் இதழுக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட டாப் 100 பட்டியலில் நயன்தாராவின் பெயர் லிஸ்ட்டிலேயே இடம்பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை சாய் பல்லவி அவர்கள் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.