இந்திய சினிமாவின் இசை உலகில் அடையாளமாக இருந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. இவர் புகழ்பெற்ற கர்நாடக பாடகி ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி போன்ற பல மொழிகளில் பாடி அசத்தியிருக்கிறார். இவர் உலகின் பல நாடுகளுக்கு பண்பாட்டு தூதுவராக சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தியும் இருக்கிறார். அதோடு ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கே சேரும்.

இவரை இசையரசி, இசைப் பேரரசி, இசைக் குயில், இசை ராணி என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். இப்படி புகழ்பெற்ற எம் எஸ் சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பல வருடங்களாக பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கில் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்த தகவல்:
இந்தப் படத்தை கெளதம் தின்னூரி இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஜெர்சி, மல்லி ராவா போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சாய் பல்லவி நடிக்க தேர்வு செய்ததற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்:
அதாவது, மேக்கப் அதிகம் இல்லாத எதார்த்தமான நடிப்பிற்கு பெயர் பெற்றவர் சாய் பல்லவி. இது எம் எஸ் அம்மா அவர்களுடைய எளிமையான தோற்றத்திற்கு ஒத்து இருக்கும். அதோட சாய் பல்லவி ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. உடல் மொழியையும் உணர்ச்சிகளையும் அவரால் சிறப்பாக இந்த கதாபாத்திரத்திற்கு பிரதிபலிக்க முடியும். இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

படக்குழு அப்டேட்:
இப்படி இருக்கும் நிலையில் சாய்பல்லவிக்கு பதிலாக சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக படக்குழு தரப்பில், சாய்பல்லவி இராமாயணம் மற்றும் அவர் ஒப்புக்கொண்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த படத்தின் வேலைகள் தாமதமாகி இருக்கிறது. சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படத்தினுடைய படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.






