விஜய், அஜித் படங்கள் உட்பட 7 படங்களில் வாய்ப்பை நிராகரித்த சாய் பல்லவி – என்ன காரணம் தெரியுமா?

0
585
- Advertisement -

விஜய், அஜித் படங்களை நடிகை சாய்பல்லவி நிராகரித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலமே, சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகள் என எல்லோருமே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் உடைய படங்களில் நடிக்க போட்டி போடுவார்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட அவர்களுடைய படத்தை இயக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இப்படி இருக்கும் நிலையில் அஜித், விஜய் படங்களில் நடிக்க முடியாது என்று நடிகை சாய் பல்லவி மறுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் நடிகை சாய் பல்லவி தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த வலிமை படத்தில் சாய்பல்லவி நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு பெரிய அளவு வரவேற்பு இல்லை என்ற காரணத்தினால் அவர் அந்த படத்தை நிராகரித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் என்றென்றும் தளபதியாக இருக்கும் விஜயின் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி தான் நடிப்பதாக இருந்தது.

- Advertisement -

சாய்பல்லவி நடிக்க மறுத்த பிரபலங்கள் படங்கள்:

தனக்கு அந்த கதாபாத்திரத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை என்று சாய்பல்லவி அந்த படத்தை நிராகரித்து விட்டாராம். அதற்கு பின்பு மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தில் கதாநாயகி அதிதி ராவ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை கேட்டிருந்தார்கள். ஆனால், கதை தனக்கு ஏற்றவாறு இல்லை என்று அந்தப் படத்தையும் நிராகரித்து இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த போலோ சங்கர் படத்தில் சாய் பல்லவியை தான் கதாநாயகியாக நடிக்க கேட்டிருந்தார்கள்.

விஜய் படத்தில் நடிக்க மறுக்க காரணம்:

தனக்கு ரீமேக் படங்கள் பிடிக்காது என்று சாய் பல்லவி மறுத்துவிட்டாராம். சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்க சாய் பல்லவியை தான் தேர்வு செய்தார்களாம். அந்தக் கதை தனக்கு ஒத்து வராது என்று சாய் பல்லவி விஜய் படத்தில் மீண்டும் நடிக்க மறுத்திருக்கிறார். இப்படி பிரபலமான முன்னணி நடிகர்களின் படங்களில் சாய்பல்லவி நடிக்க மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

சாய்பல்லவி திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய்பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சாய்பல்லவி நடிக்கும் படங்கள்:

மேலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதோடு தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இதனை அடுத்து தெலுங்கில் ஒரு படத்திலும் சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

Advertisement