என் அப்பா இந்த ஜாதியில் இருக்கவங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாரு – ஓப்பனாக கூறிய சாய் பல்லவி.

0
5452
sai
- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இந்த பாவக் கதைகள் படத்தின் ஒரு பகுதியை ‘ஓர் இரவு’ என்ற தலைப்பில் வெற்றி மாறன் இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த கதையில் பிரகாஷ்ராஜின் மகளாக இருக்கும் சாய் பல்லவி வேறு ஒரு சாதி இளைஞரை திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடி விடுவார் பின்னர் தன்னுடைய மகள் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிந்ததும் மனம் மாறி மகளை வீட்டுக்கு அழைத்து வந்து வளைகாப்பு செய்வார் பிரகாஷ்ராஜ் ஆனால் தன்னுடைய மனதில் ஜாதி வெறி பிடித்த பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்தில் மகனை கொலை செய்யும் அளவிற்கு செல்வார். இந்த கதையில் நடப்பது போல தன்னுடைய குடும்பத்திலும் தனது அப்பாவிற்கு இருக்கும் ஜாதி குறித்த பார்வையை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சாய் பல்லவி.

- Advertisement -

சமீபத்தில் வெற்றிமாறன், சாய் பல்லவி, அனுரங் கஸயப் ஆகிய மூவரும் வீடியோ உரையாடலில் பேசி இருந்தனர். அப்போது சாய் பல்லவியிடம் அனுரங் கஷ்யப், ஒரு நடிகையாக, நீங்கள் இது போன்ற ஒரு படத்தை எடுக்கும்போது, ​​நீங்கள் எத்தனை விஷயங்களைச் சொல்ல விரும்புகிறீர்கள், உங்கள் கருத்துக்கள் கேட்காதது போல் உணர்கிறீர்களா? என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி, என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே எனக்கு ஒன்றை சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள், அதாவது நீ வளர்ந்தால் ‘படுகா’ என்ற இனத்தை சேர்ந்தவரை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். நீ வேறு வேறு ஜாதி நபரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொல்லி வளர்த்தார்கள். தற்போது வரை என் அப்பா கூட ஒரு சில தருணங்களில் எனக்கு ஓகே தான். ஆனால் ‘படுகா’ இனத்தை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்வார்.

-விளம்பரம்-

இப்படி என்னை சுற்றியே பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இன்னும் கிராமத்தில் இருக்கிறோம், ஆனால் நாங்கள் ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒரு காலத்தில் இருந்த அதே கலாச்சாரத்தை பராமரிக்க விரும்புகிறார்கள்., நாம் சொல்வது, கலாச்சாரம் என்ற பெயரில் நம்முடைய மனிதத்தன்மையை இழக்கக் கூடாது என்று கூறியுள்ளார் சாய் பல்லவி. இவரின் இந்த வெளிப்படையான பேச்சிக்கு பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Advertisement