விமான நிலையத்தில் முகத்தை மூடியபடி வந்த சாய் பல்லவி. அப்படி என்ன ஊர் அது பாருங்க.

0
102856
Saipallavi

தமிழ் சினிமாவிற்கு அண்டை மாநிலமான மலையாள திரை உலகில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு வந்த வண்ணம் இருக்க தான் செய்கின்றனர். நயன்தாரா அமலாபால் துவங்கி சமீபத்தில் வந்த அனுபமா பரமேஸ்வரன் வரை அனைவருமே கேரளத்தில் இருந்து வந்தவர்கள்தான் அந்த வகையில் நடிகை சாய் பல்லவியும் ஒருவர். தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகியவர். அந்த படத்திற்கு பின்னர் பல்வேறு தமிழ், மலையாள, தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

Image

தமிழில் சூர்யாவுடன் என் ஜி கே, தனுசுடன் மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் இவர் செம ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் இணையத்தில் படு வைரலாக பரவியது. நடிகை சாய் பல்லவி 2008-ல் தாம்தூம் என்ற படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்திருந்தார் அதன் பின்னர் தனது பெற்றோர் விருப்பபடி மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், சினிமாவில் நடிக்க துவங்கியதும் தம்மால் சினிமா மற்றும் டாக்டர் தொழிலை ஒரேய நேரத்தில் பார்க்க முடியாது என்று கூறி தனது பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டத்தை கூட போட்டுக் கொள்ளவில்லை சாய் பல்லவி.

இதையும் பாருங்க : அடிக்கற குளிருக்கு எதிர் நீச்சல் பட நடிகையின் போட்டோ ஷூட்டை பார்த்தீங்க அவ்வளவு தான்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை சாய் பல்லவிக்கு அழகான சாதன விளம்பரத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் தர முன்வந்து, மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் தான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி அந்த வாய்ப்பினை நிராகரித்தார் சாய் பல்லவி. இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. சமீபத்தில் நடிகை சாய் பல்லவி விமான நிலையத்தில் முகத்தை முடியபடி சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்த புகைப்படத்தை கண்ட பலரும் டெல்லியில் தற்போது காற்று மாசு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த புகைப்படம் டெல்லி விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது என்று கமன்ட் செய்து கேலி செய்தார்கள். ஆனால், உண்மையில் இந்த புகைப்படம் ஹைத்ராபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது தான். ஆனால், நடிகை சாய் பல்லவி அங்கே ஏன் முகத்தை மூடி சென்றார். ஒரு வேலை அங்கேயும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதா என்று ரசிகர்கள் கமன்ட் செய்ய துவங்கி விட்டார்கள்.

-விளம்பரம்-
Advertisement