அட, ஒரே பள்ளியில் பயின்ற பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் மனைவிகள் – யார் யார் பாருங்க

0
2202
- Advertisement -

ஒரே பள்ளியில் பயின்ற பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் சிறு வயது புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்னரே பலத்த மழை பெய்ய தொடங்கியதால் போட்டியானது நிறுத்தப்பட்டது.

-விளம்பரம்-

மேலும், நிறுத்தப்பட்ட இந்த போட்டியானது 29/05/2023 இரவு 7.30 மணியளவில் மீண்டும் நடைபெற்றது. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 215 ரன்கள் சென்னை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய போது அனைவரும் எதிர்பார்த்த படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது ஐந்தாவது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது.

- Advertisement -

ஐபில் வெற்றி:

இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் கிரிக்கெட் அணி வீரர்கள் குறித்த செய்திகள் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் ஒன்றாக படித்திருக்கும் தகவல் இணையத்தில் வைரல்ஆகி இருக்கிறது. அதாவது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகளாக தோனி- சாக்ஷி மற்றும் விராட்- அனுஷ்கா சர்மா திகழ்கிறார்கள்.

சாக்ஷி- அனுஷ்கா ஷர்மா நட்பு:

இவர்கள் இருவருமே தங்களுடைய கணவர்கள் சிக்ஸ் அடித்தால் போதும் பால்கனியில் இருந்து ஷேர் செய்து உற்சாகப்படுத்துவார்கள். இது அனைவரும் பார்த்த ஒன்று தான். மேலும், சாக்ஷியம்- அனுஷ்காவும் ஒரே சிறுவயதில் ஒரே பள்ளியில் படித்து நெருங்கிய தோழிகளாக இருந்தவர்களாம். தோனி- விராட் நட்பை விட இவர்களுடைய நட்பு தான் பழையது. அனுஷ்கா சர்மாவின் தந்தை அஜய்குமார் வேலை காரணமாக அசாமில் தங்கி இருந்தார்.

-விளம்பரம்-

அனுஷ்கா சர்மா அளித்த பேட்டி:

அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் அனுஷ்கா படித்திருக்கிறார். அதே பள்ளியில் தான் தோனியின் மனைவி சாக்ஷியும் படித்திருக்கிறார். அப்போது இவர்கள் பள்ளியின் பருவத்தின் போது எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை கூட அனுஷ்கா சர்மா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர், நானும் சாக்ஷியும் அசாமில் உள்ள ஒரு சிறிய ஊரில் தான் தங்கி இருந்தோம்.

வைரலாகும் புகைப்படம்:

ஒரு நாள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது இதை நான் அவரிடம் கூறி இருக்கிறேன். சாக்ஷி பேன்சி ட்ரஸ் போட்டியில் கலந்து கொண்ட போது தேவதை போல உடை கொடுத்திருந்தார். அந்த புகைப்படம் என்னிடம் இருக்கிறது. அதில் அவர் மாதூரி போல் வேடம் அணிந்து இருந்தார் என்று கூறியிருந்தார். தற்போது சாக்ஷி- அனுஷ்காவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement