பிக் பாஸ்ஸில் இருந்து வெளியே வந்ததும், சாக்க்ஷி பெண்களுக்கு அளித்த அறிவுரை.!

0
2009
sakshi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாளை பூர்த்தி செய்துள்ளது இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டு இருந்தார் அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் இவர் நேரடியாகவே வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை சாக்ஷி ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் மோசமான பெயரையே பெற்றிருந்தார். எப்போதும் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவது, அடிக்கடி ஏதாவது சண்டை வரும்படி பேசுவது என்று இருந்து வந்த சாக்ஷிக்கு ரசிகர்கள் விஷம் என்றும் பெயர் வைத்திருந்தனர். அதிலும் கவின் விஷயத்தில் இவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்களுக்கு கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் பாருங்க : பிச்சை போட்டா உனக்கு வேணுமா, சொல்லு.! வெளுத்து வாங்கும் வனிதா.! 

இதுவரை வெளியில் சென்ற போட்டியாளர்கள் அனைவரும் அழாமல் வெளியே சென்றதே கிடையாது. ஆனால், சாக்க்ஷி மட்டும் தான் அழாமல் வெளியே சென்றார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்க்ஷி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அந்த பதிவில், எப்போதும் நல்ல அழகான ஆத்மாவாக இருங்கள், எதிர்மறையான உணர்வுகளில் இருந்து மீண்டு வந்து தற்போது வீட்டிற்கு வந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பெண்கள் எப்போதும் உறுதியாகவும்,, தைரியமாகவும் இருங்கள் யாரையும் உங்களை வீழ்த்த அனுமதிக்காதீர்கள். இந்த உலகம் உன்னுடையது உயரத்தை ஏற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement