KGF இயக்குனர் அடுத்த படைப்பு. எப்படி இருக்கிறது பிரபாஸின் ‘சலார்’? – முழு விமர்சனம் இதோ.

0
587
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சலார் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கே ஜி எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இதில் பிரபாஸ், பிரிதிவிராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கான்சாரின் கற்பனை நகரத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஸ்ருதிஹாசனை வில்லன் கேங்கில் இருக்கிறார். அவரை காப்பாற்ற பிரபாசை கோபி என்பவர் அனுப்பி வைக்கிறார். கோபி சொன்ன வார்த்தைக்காக தான் பிரபாஸ் தன்னுடைய அம்மா சொன்ன வார்த்தையை மீறி ஸ்ருதியை காப்பாற்றி தன்னுடன் தங்க வைக்கிறார். மேலும், பிரபாஸிடம் சண்டைக்கு போகக்கூடாது என்று அவரின் அம்ம சத்தியம் வாங்குகிறார்.

- Advertisement -

இதனால் பிரபாஸ் சண்டையிலிருந்து விலகி இருக்கிறார். இருந்தாலும் பிரபாஸை பலருமே வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஸ்ருதிக்கே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் பிரபாஸிடம் வாங்கிய சத்தியத்தை அவருடைய தாய் மீண்டும் வாங்கி கொள்கிறார். பின் வெறி கொண்ட வேட்டையாடும் மிருகமாய் பிரபாஸ் மாறி ருத்ரதாண்டவம் ஆடுகிறார். அதிரடி ஆக்சனாக இருக்கிறது.

பிரபாஸ் கோபத்திற்கு காரணம் என்ன? ஸ்ருதிஹாசனை ஏன் வில்லன் பிடித்து வைத்துக் கொள்கிறார்? ஸ்ருதிஹாசனுக்கு வரும் ஆபத்து என்ன? பிரபாஸின் அம்மா ஏன் சத்தியம் வாங்கினார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தரும் வகையில் படத்தின் மீதி கதை இருக்கிறது. படத்தில் பிரபாஸ் அவர்கள் ஆக்ரோஷமாக வன்முறையின் மொத்த உருவமாக மிரட்டி இருக்கிறார். ஆனால், எமோஷனல் காட்சிகளில் கொஞ்சம் சுதப்பிவிட்டார்.

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசன் உடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவருக்கு கொடுத்த வேலையை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். பிரபாஸின் நண்பராகவும், வில்லனாகவும் பிரித்திவிராஜ் மிரட்டி இருக்கிறார். பிரபாஸின் அம்மாவாக ஈஸ்வரியின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குனர் கதை நன்றாக இருக்கிறது. சில காட்சிகள் கிரிஞ்சாக இருந்தாலும் கதையின் மூலம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்திருக்கிறார்.

முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி பட்டையை கிளப்புகிறது. ரவி பன்சூரின் இசை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்லணும். படத்திற்கு பக்க பலமே கலை இயக்குனரின் வேலை தான். வசனங்களும் மிரட்டி இருக்கிறது. ஆனால், படத்தின் சில காட்சிகள் கேஜிஎப் படத்தை நினைவு படுத்துகிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

பிரபாஸின் நடிப்பு

கதைக்களம்

இரண்டாம் பாதி அருமை

ஆக்சன் சண்டைக் காட்சிகள்

ஒளிப்பதிவு எடிட்டிங் சூப்பர்

குறை:

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

சில இடங்கள் கே ஜி எஃப் ஐ நினைவு படுத்துகிறது

பிரபாஸ் எமோஷனல் காட்சியில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம்

மொத்தத்தில் சலார்- பளார் என்று இல்லை

Advertisement