வள்ளலாக இருந்து வரும் மதுரை வத்தல் வியாபாரி – பள்ளிக்கூடம் கட்ட கோடிகளில் தானம். நேரில் சென்று பாராட்டிய பாப்பையா.

0
2244
Rajendiran
- Advertisement -

மதுரையில் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டி தருவதாக கோடிக்கணக்கில் அப்பள வியாபாரி ராஜேந்திரன் செய்திருக்கும் உதவியை நேரில் சந்தித்து சாலமன் பாப்பையா பாராட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மதுரை மாநகராட்சியில் தத்தனேரியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு தற்போது 86 வயதாகிறது. இவர் அப்பள வியாபாரி. இவருடைய அப்பள நிறுவனத்தின் பெயர் திருப்பதி விலாஸ். இந்த நிறுவனத்தின் மூலம் இவர் அப்பளம் மட்டும் இல்லாமல் மோர் மிளகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை வியாபாரமும் செய்கிறார். இவருடைய சொந்த ஊர் விருதுநகர்.

-விளம்பரம்-

இவர் சிறு வயதில் இருந்தே கடைகளில் பணிபுரிந்து அதன் பிறகு மதுரையில் வந்து இந்த தொழிலை நடத்தி வருகிறார். இன்று இந்த தொழிலில் இவர் சிறந்த தொழில் முனைவோராகவும் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், இவருடைய வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தின் மூலம் ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறார். தற்போது மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டி கொடுத்து கொடை வள்ளலாகவும் திகழ்ந்து வருகிறார். குறிப்பாக, இவர் 2018 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் போன்வற்றை ரூ.1.10 கோடியில் கட்டித் தந்திருக்கிறார்.

- Advertisement -

அப்பள வியாபாரி செய்த வேலை:

அதன் பின் இந்த ஆண்டு 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு மாநகராட்சி கைலாசாபுரம் ஆரம்பப்பள்ளிக்கு 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, கழிப்பறைகள், மாணவர் அமர்ந்து உண்ணும் இடம் போன்றவற்றையெல்லாம் கட்டி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக மாநகராட்சி திரு.வி.க.பள்ளிக்கு 7 லட்சம் ரூபாயில் சமையலறையை கட்டித் தந்திருக்கிறார். இப்படி இவர் கோடி கணக்கில் பள்ளி மாணவர்களுக்கு கட்டிடம் கட்டித் தந்திருக்கும் உதவி பலருக்குமே தெரியாமல் இருக்கிறது. தற்போது இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலருமே ராஜேந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சாலமன் பாப்பையா அளித்த பேட்டி:

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் அப்பள வியாபாரி ராஜேந்திரன் நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் இவர் மதுரையில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்ட 20 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இவர் செய்தியாளர்களை சந்தித்து, மருத்துவமும் கல்வியும் வியாபாரமாகும்போது ஒரு சமூகம் அழிந்துவிடும். ஒரு சமூகம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் மருத்துவம் கல்வியும் இலவசமாக இருக்கணும்.

-விளம்பரம்-

ராஜேந்திரன் குறித்து சொன்னது:

கல்வி இலவசமாக இருக்கக் கூடிய இடங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும். அதனை கட்டி வளர்க்க வேண்டும். அதற்காகத்தான் நானும் மாநகராட்சி பள்ளிகளுக்கு நன்கொடை கொடுத்தேன். ஆனால், செய்தி ஒன்றின் மூலம் அப்பள வியாபாரி ராஜேந்திரன் நன்றி கொடை செய்திருக்கும் விவரம் தெரிந்து நான் திகைத்துப் போய்விட்டேன். அந்த அளவுக்கு அவர் கோடி கணக்கில் அள்ளிக் கொடுத்து உதவி செய்திருக்கிறார். அவர் ஒரு மகான். இவர்தான் உண்மையான திருவள்ளுவர். கோயில்களுக்கு நிறைய வருமானம் வருகிறது.

ராஜேந்திரன் செய்த செயல்:

அதை அந்த வருவாயை வைத்து பார்த்துக் கொள்ளலாம். வருமானம் இல்லாத இடம் பள்ளிக்கூடம் தான். அதனால் பணம் இருக்கக்கூடிய பணக்காரர்கள் கொஞ்சம் யோசிக்காமல் அரசு பள்ளிகளுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும். அதற்கு மிகப்பெரிய வழிகாட்டியாக கோடிகளை அள்ளி கொடுத்த ராஜேந்திரன் ஐயா இருக்கிறார். அவரது நிழல் நிற்கக்கூடிய தகுதி கூட எனக்கு இல்லை. இவர் பள்ளிக்கூடம் கூட சென்றதில்லை. மதுரையில் உள்ள பள்ளியிலும் படிக்கவில்லை. அவர் கொடுத்த பணத்தை விட அவர் உள்ளம் ரொம்ப பெரிதாக இருக்கிறது என்றெல்லாம் பாராட்டி பேசி இருக்கிறார்.

Advertisement