அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் டிடி. ரசிகர்களை ஷாக்காக்கிய டிடியின் பதிவு.

0
197107
dd

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 20 வருடங்கள் கடந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். எத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளையும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார்.

- Advertisement -

திவ்யதர்ஷினி குறும்புத்தனமும், சுட்டித்தனமும் கொண்டவர். இவருடைய நகைச்சுவையான, துள்ளலான பேச்சு அனைவருக்கும் தெரிந்தது தான். அதுமட்டும் இல்லாமல் திவ்யதர்ஷினியின் பேச்சால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20, ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இதையும் பாருங்க : வயதான நடிகருடன் நடிக்க ஜகா வாங்கிய நடிகைகள். நடிக்க முன்வந்த கேத்ரீன் தெரசா. ஆனா, கேட்ட சம்பளத்த பாருங்க.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி தொகுப்பாளர் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது டிடி மட்டும் தான். அந்த அளவிற்கு டிடி தொகுப்பாளர் பணியில் திறம்பட செயல்பட்டார். மேலும், இவருடைய சகோதரி பிரியதர்ஷினி ஆவார். இவரும் ஒரு சிறந்த தொகுப்பாளினியும் ஆவர். இவருடைய தம்பி விமான ஓட்டியாக உள்ளார். நடிகை டிடி 2014 ஆம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகை டிடி தனது சகோதரியுடன் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படமும், பிகினி உடையில் பாதி மறைத்தபடி விடீயோவையம் பதிவிட்டுள்ளார் டிடி. இந்த புகைப்படத்தையும் விடீயோவையும் கண்டு ரசிகர்கள் அனைவரும் டிடியா இது என்று வியப்பில் ஆழ்ந்தள்ளார்கள்.

Advertisement