சல்மான் கான் தோட்டத்தில் நடிகர்களின் பிணங்களா ? அருகில் வசித்து வருபவர் கொடுத்த ஷாக்கிங் புகார். முழு விவரம்.

0
524
- Advertisement -

சல்மான்கான் பண்ணை வீட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று எழுந்த புகாரையடுத்து நீதிமன்றத்தில் சல்மான்கான் வழக்கு தொடர்ந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ ஐசி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் 1989ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கி இருந்தார்.இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கலக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இப்படி இருந்தாலும் 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய வழக்கு குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. அதிலிருந்து மீண்டு இவர் படங்களில் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பிரமாதமாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

சல்மான் கான் பண்ணை வீடு:

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் சல்மான் கான் தன்னுடைய ஓய்வு நாட்களை தன்னுடைய பண்ணை வீட்டில் சுவாரசியமாக கழித்து வருவார். மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் பன்வெல் என்ற இடத்தில் இவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது. கொரோனா காலத்தில் இந்த வீட்டில் இருந்து கொண்டு தான் இவர் விவசாய பணிகளை செய்திருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பண்ணை வீட்டில் இருந்த சல்மான் கானை பாம்பு கடித்தது. இதனையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஷ முறிவு மருந்தை கொடுத்து தீவிர சிகிச்சை அளித்திருந்தார்கள்.

சல்மான் கான் பண்ணை வீட்டில் பிணங்கள்:

பின் அவர் உடல்நிலை குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் சல்மான்கான் பண்ணை வீட்டில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாருக்கு சல்மான் கான் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் சல்மான்கானுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடப்பதாகவும், திரையுலகை சேர்ந்த பலர் மரணித்து அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படுவதாகவும் அதே பகுதியை சேர்ந்த கேத்தன் கக்கட் என்பவர் புகார் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

கேத்தன் கக்கட் அளித்த புகார்:

இது பாலிவுட் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இந்த புகாருக்கு எதிராக சல்மான்கான், கேத்தன் கக்கட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சல்மான்கான் சார்பில் ஆஜரான வக்கீல் கூறியது, சல்மான்கானின் வீட்டுக்கு அருகே கேத்தன் கக்கட் என்பவர் நிலம் வைத்திருக்கிறார்.

சல்மான்கான் சார்பில் ஆஜரான வக்கீல் கூறியது:

அவர் வேண்டும் என்று சல்மான்கான் மீது அவதூறாக பொய் வதந்திகளை பரப்பி உள்ளார். அவர் மதம் தொடர்பாகவும் தவறாக பேசியிருக்கிறார். மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். அவர் கூறிய அனைத்தும் பொய் என்று கூறி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று கேத்தன் கக்கட்டுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்து இருக்கிறது. இது தொடர்பாக வரும் காலங்களில் கேத்தன் கக்கட்டின் பதிலுக்கு நீதிமன்றமும், சல்மான்கானும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement