படிப்பை பாதியில் விட்டு 500 ரூபாய் சம்பளத்துக்கு அந்த வேலையை செய்தேன் – திரைக்கு முன் சமந்தாவுக்கு இவ்வளவு சோகமா?

0
395
samantha
- Advertisement -

சினிமாவிற்கு முன் தான் பார்த்த வேலைகளை குறித்து சமந்தா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சமந்தா குறித்து எதாவது ஒரு செய்தி உலா வந்து கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் சோசியல் மீடியாவின் ட்ரெண்டிங் நாயகியாக சமந்தா திகழ்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். கடந்த ஆண்டு முழுவதும் இது குறித்து தான் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

சமந்தா நடிக்கும் படங்கள்:

அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாகுந்தலம், யசோதா ஆகிய பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

சமந்தா அளித்த பேட்டி:

இப்படி ஒரு நிலையில் சமீப காலமாக சமந்தா குறித்து வீடியோக்களும், புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் அதிகம் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சினிமா துறைக்கு வருவதற்கு முன் சமந்தா தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் பள்ளியில் படிப்பில் முதல் மாணவியாக இருந்தேன். ஆனாலும் பணம் இல்லாததால் என்னுடைய படிப்பை இடையிலேயே விட்டு விட வேண்டிய நிலை வந்தது.

-விளம்பரம்-

சினிமாவுக்கு முன் சமந்தா பார்த்த வேலைகள்:

சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு நான் பெரிய விழாக்களுக்கும் வரும் விருந்தினர்களை வரவேற்கும் வெல்கம் கேர்ள்ஸ் வேலையை கூட செய்தேன். அந்த வேலைக்கு எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளமாக தருவார்கள். இன்னும் சில நேரங்களில் பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு இருந்து இருக்கேன். அப்படி இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டு இருக்கேன். ஒரு சிறிய வருவாய்க்காக மாடலிங் செய்யலாம் என நினைத்த சமயத்தில் தான் என் குடும்ப உறுப்பினர்கள் உனக்கு இது தேவையா? என்று என்னை திட்டினார்கள்.

வைரலாகும் சமந்தா அளித்த பேட்டி:

பிறகு எல்லாத்தையும் எதிர்த்து சமாளித்து தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். சமீபத்தில் கூட மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டேன். என்னுடைய நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தேன் என்று சமந்தா கூறினார். இப்படி சமந்தா தன்னுடைய விவாகரத்தால் ஏற்பட்ட மனஉளைச்சல் குறித்தும் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் சமந்தாவிற்கு ஆதரவாக கருத்து போட்டு வருகிறார்கள்.

Advertisement