2022 ஆண்டை குறிப்பிட்டு 50 அட்வைஸ்களை சொன்ன சமந்தா. அதில் 12, 45வது பாய்ண்ட் தான் மிக முக்கியம்.

0
904
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவருமே அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்தது.

- Advertisement -

விவாகரத்துக்கு பின் சமந்தா :

இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தார். அதே போல விவகாரத்துக்கு கொஞ்சம் மாதங்கள் முன்பு தான் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார் சமந்தா. ஆனால், விவகாரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

நான் வலிமையாக இருக்கிறேன் :

கடந்த சில நாட்களுக்கு முன் விவாகரத்து குறித்து பேசிய சமந்தா ‘ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன். விவாகரத்து பிரிவால், நான் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான் இவ்வளவு வலிமையானவளாக இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையுடையவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது’ என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சமந்தாவின் 50 அட்வைஸ் :

இப்படி ஒரு நிலையில் புத்தாண்டு நெருங்கும் வேலையில் நடிகை சமந்தா 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக 50 குறிப்புகளை பகிர்ந்து இருக்கிறது. அதில் மிக முக்கியமாக உங்கள் சுற்றி இருப்பவர்களிடம் அன்பை காட்டுங்கள். ஒருவேளை சண்டை போட்டாள் முதல் அடியை பலமாக கொடுங்கள். நீங்கள் தைரியமாக இல்லை என்றாலும் தைரியமாக இருப்பது போல நடியுங்கள் யாரும் இதில் இரண்டிற்கும் இருக்கும் வித்தியாசங்களை சொல்ல முடியாது.

வாழ்க்கை துணையை கவனமாக தேர்ந்தெடுங்க :

உங்களின் வாழ்க்கை துணையை கவனமாக தேர்ந்தெடுங்கள். அந்த ஒரு முடிவால் தான் உங்களின் வாழ்வில் 90 சதவீத மகிழ்ச்சியோ அல்லது சோகமோ ஏற்பட காரணமாக இருக்கும். சிலருக்கு இரண்டாம் வாய்ப்பை கொடுங்கள் ஆனால், மூன்றாம் வாய்ப்பை கொடுக்காதீர்கள் உங்களின் பிறப்பும் இறப்பும் தான் முக்கியம் மற்றதை பற்றி கவலைப்படாதீர்கள். அன்பிற்காக மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்’ என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்

Advertisement