முதல் முறையாக ‘பேமிலி மேன்’ சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டு சமந்தா எடுத்த அதிரடி முடிவு.

0
3786
samantha
- Advertisement -

முதல் முறையாக பேமிலி மேன் சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டு தன் திரை வாழ்விலும் சமந்தா அதிரடி முடிவை எடுத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக லீடு ரோலில் நடித்து வரும் சமந்தா தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.

-விளம்பரம்-
Samantha Akkineni Pens Heartfelt Note On The Family Man 2; Says Raji Will  Always Be Special - Filmibeat

தற்போதும் தமிழ், தெலுங்கு என்று ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘பேமிலி மேன்’ தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இழத் தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்திரித்து காட்டியதாக இந்த தொடரை ஒளிபரப்பகூடாது என்றும் பலர் போர் கொடி தூக்கினர்.

இதையும் பாருங்க : சார்பட்டா படத்தை விமர்சனம் செய்தவரின் பதிவையும் லைக் செய்த ஆர்யா – கேலி செய்த ரசிகருக்கு கொடுத்த பதில்.

- Advertisement -

அப்படி இருந்தும் பல்வேரு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த சீரிஸ் வெளியாகி இருந்தது. சமீபத்தில் கூட இந்த சீரிஸ்ஸில் நடித்ததர்க்காக சிறந்த நடிகையாக சமந்தாவிற்கு விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக பேமிலி மேன் சர்ச்சை குறித்து பேசியுள்ள சமந்தா, அனைவருக்குமே அவரவர் கருத்து என்பது இருக்கும் அதை நான் மதிக்கிறேன். இருப்பினும் நான் ஏதாவது உங்கள் உணர்வை காயப்படுத்தி இருந்தால் மனமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Samantha Removes 'Akkineni' From Her Name

மேலும், அப்படி நடந்திருந்தால் அதை நான் அறிந்து செய்யவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் இருப்பினும் இந்த தொடர் வெளியான பின்னர் விமர்சனங்கள் கொஞ்சம் குறைந்தது என்று கூறியுள்ளார். மேலும், 11 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வரும் சமந்தா திரை வாழ்க்கையில் கொஞ்சம் பிரேக் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். தற்போது நடித்து கொண்டு இருக்கும் படங்களை தவிர வேறு எந்த படத்திலும் சமந்தா கொஞ்சம் காலம் ஒப்பந்தம் ஆகமாட்டாராம்.

-விளம்பரம்-
Advertisement