சார்பட்டா படத்தை விமர்சனம் செய்தவரின் பதிவையும் லைக் செய்த ஆர்யா – கேலி செய்த ரசிகருக்கு கொடுத்த பதில்.

0
1393
sarpatta
- Advertisement -

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

-விளம்பரம்-

வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக டான்சிங் ரோசாக வந்த நடிகர் ஷபீர், டாடியாக வந்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக வந்த பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் 5 ப்ரோமோ ஷூட்டிங்கில் கமல் இணையத்தில் லீக்கான புகைப்படம் – ஆரம்பிக்களாங்களா ?

- Advertisement -

இந்த திரைப்படத்தில் 70 காலகட்ட பாக்சிங் பரம்பரைகளை பற்றி காண்பித்து இருந்தாலும் படம் முழக்க தி மு கவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல தான் பல காட்சிகளும், வசனங்களும் இருந்தது.அதே போல ரஞ்சித் எம் ஜி ஆரை தவறாக சித்தரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் இருக்கிறது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை தான் பெற்று இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் ஆர்யாவிற்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ஒருவர் இந்த படத்தை மொக்க என்று கூறி விமர்சனம் ஒன்றை போட்டு இருந்தார். அதில், சர்ப்பட்டா படத்தில் ஆர்யா. துஷாரா விஜயன், பசுபதி, டான்சிங் ரோஸ் ஆகியோர் எல்லாம் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். முதல் 90 நிமிடம் நன்றாக இருக்கிறது. ஆனால் , அதன் பின்னர் சில மணி நேரம் கத்துவது, பாட்டு , அரசியல் போன்றவைகள் கொஞ்சம் படத்தை இழுத்து கொண்டு போகிறது.

-விளம்பரம்-

அதையெல்லாம் கட் செய்து இருக்கலாம். மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த விமர்சனத்தையும் நடிகர் ஆர்யா, லைக் செய்து இருப்பதை கண்ட ரசிகர் ஒருவர், தம்பி ஆர்யா நீ படிச்சிட்டு தான் லைக் போட்றயா என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு ஆர்யா, ஆமா, ப்ரோ என்று பதில் அளித்துள்ளார். ஆர்யாவின் இந்த பதிலால் படத்தை மொக்கை என்று விமர்சிப்பவர்களின் கருத்தை கூட மதிக்கும் ஆர்யாவின் இந்த குணத்தை பாராட்டி வருகின்றனர்.

Advertisement